states

img

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை

புதுதில்லி 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப  வன்முறை தொடர்பான ஆய்வ றிக்கையை தேசிய மகளிர் ஆணை யம் வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் மாநிலம் தான் பெண்களுக்கு எதி ரான குடும்ப வன்முறையில் முத லிடத்தில் இருப்பதும், பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடை பெறும் மாநிலங்களில் பெண் களுக்கு எதிரான குடும்ப வன்முறை மிக மோசமான அளவில் நிகழ்ந்து வருவது அம்பலமாகியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் வெளியான தகவலின் அடிப் படையில், 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக குடும்பப்  பிரச்சனை காரணமாக வீடுகளுக் குள் நிகழும் வன்முறையால் 25,743 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த குடும்ப வன்முறையில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அங்கு 13,868 புகார்கள் பதிவாகியுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 54% ஆகும். பாஜக மாநிலங்களில்  மிக மோசம் அடுத்து மோடி அரசின் சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ள தில்லி 2,245 புகார்களுடன் இரண்டா வது இடத்தில் உள்ளது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா 1,317 புகார்களுடன் 3ஆவது இடத்திலும், பீகார் 1,233  புகார்களுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. அதே போன்று பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம் 1,070 புகார்களுடன் 5ஆவது இடத்திலும், ஹரியானா 1,048 புகார்களுடன் 6ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 847 புகார்களுடன் 7ஆவது இடத்திலும் உள்ளன. அதே நேரத்தில் மேற்கு வங்கம் 563 புகார்களுடன் 8ஆவது இடத்திலும், தமிழ்நாடு 513 புகார்களுடன் 9ஆவது இடத்திலும், கர்நாடகா 481 புகார் களுடன் 10ஆவது இடத்திலும் உள்ளன. கேரளா உள்ளிட்ட மற்ற  மாநிலங்களில் 400க்கும் குறை வான அளவிலேயே  பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வரதட்சணைக்  கொடுமை அதிகம் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை புகார்களில் வரதட்ச ணைக் கொடுமையே முன்னணி யில் உள்ளது. அதாவது மொத்த புகார்களில் 17% (4,383 புகார்கள்) வரதட்சணைக் கொடுமை தொடர்பானவை ஆகும். இதில் 292 வரதட்சணை உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பாலியல் வன்கொடுமை  பாலியல் வன்கொடுமை தொடர்பாக 1,422 புகார்களும், பாலி யல் துன்புறுத்தல் தொடர்பாக 1,015 புகார்களும், பெண்களுக்கு எதி ரான சைபர் கிரைம் தொடர்பாக 523 புகார்களும், பணியிடங்களில் நிகழும்  பாலியல் துன்புறுத்தல் 205 புகார்களும் பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.