தஹாவூர் ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தல்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப் பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியா அழைத்துவரப்பட்டார். 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா. அமெரிக்காவில் இருந்த தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. நாடுகடத்தலை எதிர்த்து தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப் பட்ட தஹாவூர் ராணா பலத்த காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக் கும். மும்பை அல்லது தில்லி சிறையில் அடைக் கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.