புதுதில்லி, ஜூலை 4 - தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ் குமாரின் பதவி ஏற்பை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு, ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உமேஷ்குமாரின் நியமனத்தை எதிர்த்து தில்லி அரசு தொடர்ந்த வழக்கிலேயே உச்சநீதிமன்றம் இந்த உத்தர வைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11-ம் தேதி நடைபெறும். அது வரை உமேஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி தில்லி அரசை துணைநிலை ஆளுநர் கேட்கக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.