சரிவு..?
2022இல் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்த லில் 13 விழுக்காடு வாக்குகளை வாங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆம் ஆத்மிக் கட்சி, தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியில் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேர்ந்ததாலும், நடந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் கூட வென்றனர். மார்ச் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் மக்கள் செல் வாக்குள்ள தலைவர்கள் வெளியேறுகின்றனர். அல்பேஷ், தார்மிக் ஆகிய இருவரும் வெளி யேறியபோதே ஆட்டம் கண்ட ஆம் ஆத்மி, விவசாயி களின் தலைவர் ராஜூ கர்படாவின் விலகலால் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. சேதத்தை சரிப் படுத்த முயலாமல், கர்படா சரணடைந்து விட்டார் என்ற மாநில நிர்வாகிகளின் விமர்சனத்தால் தில்லி தலைமை கைகளைப் பிசைந்து நிற்கிறது.
வருமா..?
2025ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்த லின்போது 128 பக்க தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது. அதில் மாதா மாதம் ரூ.2,500 மகளிருக்கான உரி மைத்தொகை என்பது 16 முக்கியமான வாக்குறுதி களில் ஒன்றாகும். ஓராண்டு நிறைவை தில்லி அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வாக்குறுதி இதுவரையில் நடைமுறைக்கு வர வில்லை. கேட்டால், புள்ளிவிபரங்கள் இல்லையாம். ஓராண்டு காலத்தில் இவர்கள் ஏழைக் குடும்பப் பெண்களைக் கூட அடையாளம் காண முடிய வில்லை. இந்தத் திட்டம் வரும் என்று நினைத்துதான் நாங்கள் வாக்களித்தோம் என்று கூறும் பெண்கள், இத்தனைக்கும் அதிகாரத்தில் இருப்பது ஒரு பெண் முதலமைச்சர். இந்த வாக்குறுதியை நடைமுறைப் படுத்தாமல் அவர்களால் மீண்டும் வாக்குக் கேட்டு வர முடியாது என்கிறார்கள். இதுதான் இரட்டை என்ஜினா என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.
விடை..?
மோசடி செய்து அம்பலமான கல்கோ டியாஸ் பல்கலைக்கழகத்திற்கு எப்படி இவ்வளவு பெரிய இடம் செயற்கை நுண்ணறிவு நிகழ்வில் ஒதுக்கப் பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்களு க்கு 155 சதுர மீட்டர் கிடைத்தது. மும்பை ஐஐடி க்கு 35 ச.மீ, சென்னை ஐஐடிக்கு 35 ச.மீ, காரக்பூர் ஐஐடிக்கு 24 ச.மீ, காந்திநகர் ஐஐடி க்கு 18 ச.மீ, என்று ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த ஐஐடிக்கள் அனைத்திற்கும் ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தை விட பெரியதாக கல்கோடி யாஸ் பல்கலை.க்கு தந்துள்ளனர். தங்கள் சுய மான தயாரிப்புகளை காட்சிப்படுத்தவே இந்த நிகழ்வு என்று ஒன்றிய மின்னணு துறையின் செயலாளர் கிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால், போலி ஏற்பாடுகளுடன் வந்த கல்கோ டியாஸ் எப்படி அனுமதிக்கப்பட்டது என்ப தற்கான விடை கிடைக்கவில்லை.
ஓட்டம்..?
நாட்டை விட்டு ஓடிப் போக மாட்டேன் என்று ரிலையன்ஸ் நிறுவ னத்தின் அனில் அம்பானி உச்சநீதிமன்றத்தில் உறுதிய ளித்துள்ளார். அவர் மீதான 40 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் மனுதாரரான முன்னாள் ஒன்றிய அரசு அதிகாரி இஏஎஸ் சர்மா பல சந்தேகங்களை எழுப்பியி ருக்கிறார். அதில் ஒன்றுதான், இந்தப் பொரு ளாதாரக் குற்றவாளிகள் தங்கள் இஷ்டத்திற்கு வெளிநாடுகளுக்கு ஓடிப் போகிறார்கள்.. இவர் அப்படிப் போய் விடக்கூடாது என்றிருக்கிறார். நீதிபதியும் அனில் அம்பானியின் வழக்கறிஞரைப் பார்த்து, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். இல்லை.. இல்லை.. சொல்லாமல் போக மாட்டேன் என்று எழுத்துப் பூர்வமான உறுதிமொழியை நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
