states

img

பள்ளி மதிய உணவில் இறந்த பாம்பு ; 100 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு

பள்ளி மதிய உணவில் இறந்த பாம்பு ; 100 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு

பாஜக ஆளும் பீகார் மாநிலத்தில் கொடூரம்

கார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமா ரும், துணை முதலமைச்சர்களாக பாஜக வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹாவும் உள்ளனர். இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னா அருகே மொகாமா கிராமத்தின் அரசுப்  பள்ளியில் ஏப்ரல் 24 அன்று வழங்கப்பட்ட மதிய உணவை கிட்டத்தட்ட 500 குழந்தை கள் சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில நிமிடங் களில்  மதிய உணவை உட்கொண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தீவிர  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் அனைவரையும் பள்ளி ஆசி ரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்த னர். தற்போது குழந்தைகளின் உடல்நலம் தொடர்பாக தெளிவான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இறந்த பாம்பு

இந்த சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் ஆகி யுள்ள சூழலில், பள்ளியின் சமையல்காரர் மதிய உணவில் விழுந்த பாம்பை அகற்றிவிட்டு குழந்தைகளுக்கு உணவை வழங்கியதால் குழந்தைகளுக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளி யிட்டு, தீவிர   விசாரணை மேற்கொள்ள பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மனித  உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை தொடர்ந்து மொகாமா கிராம மக்கள் பீகார் பாஜக கூட்டணி அரசாங்கத்தை கண்டி த்தும், அரசு பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  2013ஆம் ஆண்டு பாட்னாவிற்கு அரு கிலுள்ள தர்மசதி கண்டமன் கிராமத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்த மதிய உணவை சாப்பிட்ட 23 பள்ளி குழந்தைகள் இறந்தனர். இந்த சம்ப வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநி லம் வன்முறையுடன் கூடிய போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.