காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தின் தும்கூரு அருகே ஸ்ரீவாரா பகுதியைச் சேர்ந்தவர் தீபு (19). இவர் விவசாயிகளிடம் பால் சேகரிப்பதற்காக, தும்கூருவில் உள்ள முத்தனஹள்ளி கிராமம் வழியாக வேனில் சென்று கொண்டு இருந்தார். தீபுவுடன் வேன் டிரைவர் நரசிம்மமூர்த்தி இருந்தார். திங்களன்று மாலை 6 மணியளவில் தும்கூரு ரயில்வே கிராஸிங் அருகே ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சந்திரசேகர், அவரது நண்பர் நரசிம்மராஜ் ஆகிய இருவரும் ரயில்வே பாதுகாப்புப் படை எனக்கூறி வேனை வழிமறித்து, “அம்பேத்கர் பாடலை ஏன் வேனில் ஒலிபரப்புகிறாய்? நீ எந்த சாதி?” என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு தீபு,”நான் தலித் மதத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கர் பாடலை ஒலி பரப்புவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என கூறினார். “ரயில்வே பாதுகாப்புப் படையையே கேள்வி கேட்கி றாயா?” எனக் கூறி, தீபுவை கையில் இருந்த தண்டவாள பராமரிப்பு சாதன கம்பியை வைத்து தாக்கியுள்ளனர். தீபுவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வர சந்திரசேகர், நரசிம்மராஜ் ஆகிய இருவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அப்பகுதி மக்களே தீபுவை மீட்டு மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீபுவின் உடலில் மொத்தம் 9 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தலித் அமைப்பு கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீபுவை தாக்கியவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.