states

தலித், பழங்குடியின ஆசிரியர்களுக்கு தகுதியில்லை என வாய்ப்பு மறுப்பு

தலித், பழங்குடியின ஆசிரியர்களுக்கு தகுதியில்லை என வாய்ப்பு மறுப்பு  

நாடாளுமன்ற நிலைக்குழுகடும் கண்டனம்

நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய அரசின் பல்கலைக் கழகங்களில் பட்டியலினம், பழங்குடியினர் (எஸ்.சி, எஸ்.டி.,) பிரிவி னருக்கான இடஒதுக்கீட்டில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி (மக்களவை) சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து, “தகுதி இல்லை என்ற புதிய முறையை பயன் படுத்தி, மத்திய பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் திட்ட மிட்டு வெளியேற்றப்படுகின்றனர். தகுதி இல்லை என்பதே தற்போதைய புதிய மனு வாதம்” என்பது பெரும் விவாதத்தை ஏற் படுத்தியது. இதனைத்  தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எம்.பி., பக்கன் சிங் குலாஸ்தே தலைமையி லான எஸ்.சி, எஸ்.டி. நலனுக்கான நாடா ளுமன்ற நிலைக்குழு, தனது அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளது. அதில்,“தில்லி பல்கலைக்கழக நியம னங்கள் குறித்த ஆய்வின்போது, எஸ்.சி, எஸ்.டி. பேராசிரியர்களுக்காக ஒதுக்கப் பட்ட பதவிகளுக்கு, அவர்களுக்கு (எஸ்.சி, எஸ்.டி) தகுதியில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தகுதியில்லை என்ற வார்த்தை யை பயன்படுத்தி, தகுதியான எஸ்.சி, எஸ்.டி. ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை மறுப்பதை இந்த குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது முறையற்றது மட்டுமல்லாமல், தகு தியான மற்றும் நன்கு பயிற்சி பெற்ற எஸ்.சி, எஸ்.டி. விண்ணப்பதாரர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. இன் றைய காலகட்டத்தில், கற்பித்தல் துறைக ளில் சிறப்பான நற்சான்றுகளைக் கொண்ட தகுதியான எஸ்.சி, எஸ்.டி. விண்ணப்ப தாரர்களுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. எனவே, பேராசிரியர் பணிக ளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி. விண்ணப்பதாரர்கள், அவர்களின் கல்வித் திறமையின் அடிப்படையில் மட்டுமே மதிப்பி டப்பட வேண்டும்” என நாடாளுமன்ற நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.