கேரளாவில் பல்கலை., துணை வேந்தர்களை நியமிக்க குழு
உச்சநீதிமன்றம் உத்தரவு
கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் உள்ள டிஜிட்டல் அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சிசா தாமஸையும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கே. சிவ பிரசாத்தையும் நியமனம் செய்து கடந்த ஆண்டு நவம்பரில் ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் ஆணையிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன் றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு திங்கள ன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, வி.வி.விஸ்வ நாதன் அமர்வு,”டிஜிட்டல் அறிவியல் பல்க லைக் கழகம் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என இரண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் தலைவ ராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு துலியா வை நியமிக்கிறோம். 5 பேர் கொண்ட குழு வில் இரண்டு உறுப்பினர்கள் வேந்தர் பட்டி யலிலிருந்தும், இரண்டு பேர் மாநில பட்டிய லிலிருந்தும் இருக்கட்டும். இருப்பினும், இறுதியில் அதைத் தலைவரின் விருப்பப் படி விட்டுவிடுகிறோம். துணைவேந்தர் தேடுதல் தொடர்பாக விளம்பரங்களை வெளியிட்டு 4 வாரத்தில் விண்ணப்பங்கள் பெற்று 3 மாதத்தில் நியமனங்களை முடிக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் பல் கலைக்கழக துணை வேந்தர்களை நிய மிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இத்தகைய சூழலில், எதிர்க்கட்சி ஆளும் கேரள மாநி லத்தில் துணை வேந்தர்களை தேர்வு செய்வ தற்கான பட்டியலை தயார் செய்ய உச்சநீதி மன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டு இருப்பது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.