states

img

நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை சோதனை

நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை சோதனை

திருவனந்தபுரம் மலையாள திரை யுலகின் முன்னணி நடிகர்களாக இருப்ப வர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான். இருவரும் தமிழ் மொழி படங்களில் அதிக ளவில் நடித்துள்ளனர். இதில் துல்கர் சல்மான் தென் னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவ ரான மம்முட்டியின் மகன் ஆவார். இந்நிலையில், வாகன ஏலம் தொடர்பாக செவ் வாய்க்கிழமை அன்று நடி கர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத் துறை அதிகாரிகள் சோத னை நடத்தினர். பூடான் நாட்டில் ராணுவத்தின் உயர் ரக வாகனங்கள் சமீபத்தில் ஏலமிடப்பட்டுள்ளன.  இந்த வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தவர்கள் வாகனங்க ளை பூடானில் இருந்து இமாச்சலப் பிரதேசத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு அந்த வாக னங்களை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். வாகனத்தின் மதிப்பை மறைத்தும், விற்பனை தொகையை மறைத்தும் ஒன்றிய அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.  இந்த விவகாரம்  தொ டர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக “ஆபரேஷன் நும்கூர்” (பூடா னில் நும்கூர் என்றால் வாக னம்) என்ற பெயரில் நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடு கள் உள்பட மொத்தம் 30 இடங்களில் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் (Customs Officials) சோதனையை மேற்கொண் டனர்.  பிரித்விராஜ் வீட்டில் பூடான் நாட்டு கார் இல்லா ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ஆனால் துல்கர் சல்மானின் வீட்டில் அவரது பெயரில் உள்ள “லேண்ட் ரோவர் டிபென் டர்” கார் உள்பட 2 கார்களை  சுங்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்துள்ள னர்.  மேலும், கார் வாங்கி யதற்கான முறையான ஆவ ணங்களை சமர்ப்பிக்கவும் சுங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.