states

img

சிஆர்பிஎப் வீரர்கள் தான் லடாக்கில் வன்முறையை தூண்டினர்

சிஆர்பிஎப் வீரர்கள் தான் லடாக்கில் வன்முறையை தூண்டினர்

சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி குற்றச்சாட்டு

லே லடாக்கில் வன்முறையை தூண்டியதாக காலநிலை ஆர்வலரும், ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான சோனம் வாங்சுக் செப்., 26 ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய் யப்பட்டார். தற்போது அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். சோனம் வாங்சுக் சிறையில் அடைக் கப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவரது மனைவியுடன் பேச சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தான் லடாக்கில் வன்முறை யை தூண்டினர் என சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஜே.அங்க்மோ குற்றம் சாட்டியுள் ளார். இதுதொடர்பாக “தி வயர்” இணையதள செய்தியாளரிடம் அவர் கூறுகையில், “லேயிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் வாங்சுக் கைது செய்யப்பட்ட போது, நான் லடாக்கில் இருந்தேன். கைது செய்யப்பட்ட பொழுது, அவர் ஜோத்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜோத்பூரை வந்தடைந்த பிறகு அவரிடம் பேச அனுமதி வழங்குகிறேன் என காவல் ஆய்வாளர் ஒருவர் உறுதி அளித்தார். ஆனால் இன்று வரை எனக்கு எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் சிசிடிவிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் தனி அறை யில் அடைக்கப்பட்டுள்ளார்.  வாங்சுக் ஒரு காந்தியப் போராட்டத்தை நடத்தி வருகிறார் என்பது மட்டும் எனக்கு  நன்றா கத் தெரியும். அதனால்தான் அவர் சத்தியாக் கிரகம், பாதயாத்திரைகள், எல்லாவற்றையும் அமைதியாகச் செய்து வந்தார். மாறாக காவல்துறை அவரை இழுத்துச் செல்லும். தில்லியிலும் கூட காவல்துறையினர் அதையே செய்தார்கள். தற்போதைய சூழ்நிலையில், வாங்சுக் எந்த நிபந்தனையின் கீழ் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என உறுதி செய்ய முடியவில்லை.  வாங்சுக் கைது செய்யப்பட்டதை அவரது மனைவியாக ஏற்பதை விட ஒரு இந்தியராக இது எனக்கு மிகவும் வேதனையை அளிக்கி றது. ஏனெனில் அவர் சர்வதேச அளவில் பாராட் டப்பட்ட ஒரு கல்வியாளர். தனது முழு வாழ்க்கை யையும் நாட்டிற்காக அர்ப்பணித்த காலநிலை ஆர்வலர். அவர் ஒரு தேசபக்தர். இந்திய ராணுவத்தின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பாடுபட்டார்.  ஆனாலும் வாங்சுக் தேச விரோதி என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றிய ஆட்சியாளர்கள் இதுபோன்ற ஒன்றைச் செய்வார்கள், கொடு மைப்படுத்துவார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களால் அவர் பாதுகாக்கப்படுவார். குறிப்பாக நான்  ஒன்றை கூற விரும்புகிறேன். செப்., 25 அன்று  லடாக்கில் வன்முறையை ஏற்படுத்தியது இளை ஞர்கள் அல்ல. சம்பவ இடத்தில் இருந்த சிஆர்பிஎப்  வீரர்கள் தான் வன்முறையை தூண்டினர்” என அவர் குற்றம்சாட்டினார்.