states

img

எஸ்ஐஆர் குளறுபடிகளை சரிசெய்யவில்லை என்றால் பெரும் போராட்டம் வெடிக்கும் சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் எச்சரிக்கை

எஸ்ஐஆர் குளறுபடிகளை சரிசெய்யவில்லை என்றால் பெரும் போராட்டம் வெடிக்கும் சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் எச்சரிக்கை

கொல்கத்தா மேற்குவங்க மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) பின்பு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெரிய அள விலான முறைகேடுகள் நடந்து ள்ளது. அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நீக்கம் மற்றும் விசாரணை மூலமாக 1 கோடி வாக்கா ளர்களை நீக்கதேர்தல் ஆணையம் சதி திட்டத்தில் இறங்கியுள்ளது.  இந்நிலையில், எஸ்ஐஆர் முறைகேடுகளை கண்டித்தும், மக்களின் வாக்குரிமையைப் பாது காக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுசாரி கட்சிகள் கொல் கத்தாவில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் முன் பாக போராட்டத்தில் ஈடுபட்டன. சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநிலச் செயலாளருமான முகமது சலீம் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “எஸ்ஐஆர் பணிக்குப் பின்பு  மேற்கு வங்கத்தில் 60 லட்சம்  பேரின் வாக்குரிமை பறிக்கப் பட்டுள்ளது. அதே போல வாக்கு ரிமை சரிபார்ப்பு மற்றும் விசா ரணை என்ற பெயரில் மேலும் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் முடக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களை வாக்குரிமையற்றவர்களாக மாற்றி, மேற்கு வங்கத்தில் நடத்த ப்படும் கேலிக்கூத்தான தேர்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர்களின் விசாரணை முடக்கத்தை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தீர்க்கவில்லை என்றாலும், அதற்குப் பொறுப் பான அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்காவிட்டாலும், மாநி லம் தழுவிய பிரம்மாண்ட மக்கள் போராட்டத்தைத் தொடங்குவது டன், உயர்நீதிமன்றங்களையும் நாட நேரிடும். பொதுமக்களின் கோபத்தினால் ஏற்படும் எந்த வொரு விளைவுக்கும் தேர்தல் ஆணையமும் மாநில நிர்வாக முமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.