ராஜஸ்தானில் சிபிஎம்-இன் மக்கள் போராட்டப் பயணம் தொடங்கியது
4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விபி- ஜி ராம் ஜி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட சட்டம், ஷாந்தி மசோதா (அணுசக்தி, அணு விபத்து இழப்பீடு தொடர்பான புதிய சட்டம்), மின்சார சட்டத் திருத்த மசோதா, விதை மசோதா, இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் நாட்டின் இறை யாண்மையை அடகு வைக்கும் பிற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்து, ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனு மன்கரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘மக்கள் போராட்டப் பயணம் (ஜனசங்கர்ஷ் ஜாதா)’ தொடங்கியுள்ளது. இந்தப் பயணத்தின் துவக்க நிகழ்வை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், ராஜஸ்தான் மாநிலச் செயலாளர் கிஷன் பரீக் ஆகியோர் முன்னின்று தொடங்கி வைத்து, நடை பயணம் மேற்கொண்டனர். மோடி அர சுக்கு எதிரான வலுவான முழக்கங்களு டன் இந்த நடைபயணம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று, இறுதியில் ராஜஸ்தான் தலைநக ரான ஜெய்ப்பூரை மார்ச் 7 அன்று சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
