சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தீர்க்க சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கோரிக்கை
புதுதில்லி நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் ‘ஒதுக்கீட்டு மசோதா (The Appro priation Bill, 2026)’ மீதான விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரையில்,”எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மூலம் நாட்டில் கொரோனா போன்ற ஒரு நெருக்கடி உருவாகி வரு கிறது. தட்டுகளைத் தட்டுவது இந்த நெருக்கடியைத் தீர்க்காது. இரண்டு கப்பல்கள் நம் நாட்டின் கடல் கரையை நோக்கி வந்துள்ளன. ஆனால் இந்த விஷயம் மூலம் ஏதோ ஒட்டுமொத்த சிக்கலை முழுவதுமாக முறி யடித்துவிட்டது போல விளம் பரப்படுத்தப்படுகிறது. இந்த எல்பிஜி தட்டுப்பாடு நாட்டின் பிற துறைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேற்கு ஆசிய மோதல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரண மாக நாட்டில் நிலவும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தீர்க்க வேண்டும்” என அவர் கூறினார்.
