states

img

சிபிஎம் தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜாவின் வெற்றி வெல்லும்!

சிபிஎம் தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜாவின் வெற்றி வெல்லும்!

உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர்  ஏ.ராஜாவின் தேர்தல் வெற்றி செல்  லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. ராஜாவின் தேர்தல்  வெற்றி செல்லாது என உயர்நீதி மன்ற அளித்திருந்த தீர்ப்பை, உச்ச  நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏ.ராஜா கிறிஸ்தவ நம்பிக்கை யாளர் என்பதால், அவர், இட ஒதுக்கீடு தொகுதியில் போட்டி யிட்டு பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று, காங்கி ரஸ் வேட்பாளர் டி. குமார் உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருந்தார். மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம்,  இடஒதுக்கீடு தொகுதியில் போட்டி யிட ராஜாவுக்கு தகுதியில்லை என்று சுட்டிக்காட்டி, 2023 மார்ச் 20  அன்று ராஜாவின் தேர்தல் வெற்றி யை ரத்து செய்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக வழக்க றிஞர் ஏ. ராஜா உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையல், உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தி ருந்தது. தற்போது, ஏ. ராஜாவின் வழக்க றிஞர்கள் முன்வைத்த வாதங் களை ஏற்றுக்கொண்டு, ‘வெற்றி  செல்லாது’ என்ற உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பை, ரத்து செய்து, நீதி பதிகள் ஏ. அமானுல்லா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச  நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள் ளது. தமிழ்நாட்டிலிருந்து மூணா றுக்கு குடியேறிய இந்து - பறை யர் பிரிவைச் சேர்ந்த பெற்றோ ருக்குப் பிறந்தவர் தான் தனது தந்தை என்று ஏ. ராஜா உச்ச நீதி மன்றத்தில் வாதிட்டார். 1950-க்கு  முன்னர் மூணாற்றில் குடியேறிய தால் கேரளத்தில் இடஒதுக்கீடு தொகுதியில் போட்டியிட தனக்கு  தகுதி உண்டு என்றும் ராஜா வாதிட்  டார். தனது பாட்டி புஷ்பம் 1950-க்கு முன்னரே கேரளத்திற்கு வந்து விட்டார் என்பதை நிரூபிக்க கண்  ணன் தேவன் ஹில் பிளாண்டே ஷன் நிறுவன ஆவணத்தையும் ஏ.  ராஜா சமர்ப்பித்தார். அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி. கிரி, வழக்கறிஞர்கள் ஏ. பிரகாஷ், ஜாய்ஸ் ஜார்ஜ், கிருஷ்ணன் உண்ணி ஆகியோர் ஆஜராகினர். இவற்றை ஏற்றுக்கொண்டு, ஏ. ராஜாவுக்கு பட்டியல் வகுப்பு இட  ஒதுக்கீட்டில் போட்டியிட தகுதி உண்டு என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.  சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதுவரை உள்ள அனைத்து சலுகைகளையும் ராஜா வுக்கு வழங்கவும் உச்சநீதிமன் றம் உத்தரவிட்டது.