states

img

எதிர்க்கட்சிகளை அவமதிப்பதா பிரதமர் மோடியின் செயலுக்கு சிபிஎம் கண்டனம்

எதிர்க்கட்சிகளை அவமதிப்பதா பிரதமர் மோடியின் செயலுக்கு சிபிஎம் கண்டனம்

அகர்தலா வாக்குத் திருட்டு பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி கடந்த 2 வார காலமாக தினமும் ஒவ்வொரு மாநிலங்களு க்குச் சென்று நலத்திட்ட அறிவிப்பு என்ற பெயரில் அரசு நிகழ்ச்சியை “அரசியல் பிரச்சார நிகழ்ச்சியாக” நடத்தி வருகிறார். செப்., 22ஆம் தேதி திரிபுராவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கோமதி மாவட்டத்தின் உதய்பூரில் அமைந் துள்ள புதுப்பிக்கப்பட்ட “மாதா திரிபுர சுந்தரி” கோவிலை திறந்து வைத்தார். மோடியுடன் பாஜக எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பொது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் திறப்பு விழாவிற்கு மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஎம் கண்டனம் இந்த விவகாரம் தொடர்பாக திரிபுரா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறு கையில்,“நான் அரசியலமைப்புச் சட்டப் பதவி யில் (எதிர்க்கட்சித் தலைவர்) உள்ளேன். ஆனால் மாதா திரிபுர சுந்தரி கோவில் திறப்பு நிகழ்விற்கான அழைப்பை நான் பெறவில்லை. செப்., 21 மற்றும் 22 அன்று நான் அகர்தலாவில் (திரிபுரா தலைநகர்) தான் இருந்தேன். ஆனால் எந்த அழைப்புக் கடிதமும் எனக்கு வரவில்லை. நான் எந்த அழைப்பை யும் பெறவில்லை என்றால், எனது கட்சிக்கும் (சிபிஎம்) அழைப்பு வரவில்லை என்று கருத லாம். பாஜக அரசாங்கத்தின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. எங்களுக்கு அழைப்பு வந்திருந்தால் நாங்கள் சென்றிருப்போமா என்பது வேறு விஷயம். முதலில் அழைக்க வேண்டும். இது  ஒரு மத விழா அல்ல. மாதா திரிபுர சுந்தரி கோவில் மக்களின் வரிப் பணத்தைப் பயன் படுத்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் அனை த்து அரசியல் கட்சிகளும், சட்டமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் அழைக்கப்பட வேண்டும் என்பது மாநிலத்தின் பாரம்பரியம். ஆனால் பாஜக தனது சொந்த நிதியில் கட்டப்பட்டது போன்று கோவில் திறப்பு விழாவை தனியாக கொண்டாடியுள்ளது. இதன்மூலம் பாஜகவிற்கு சட்டங்களோ விதி களோ எதுவும் இல்லை. அரசியலமைப்பையும் மதிப்பதில்லை. பாஜக ஒரு தனியார் நிறுவன மாக மாறிவிட்டது” என கடுமையாக சாடி னார். பாஜகவிற்கு சொந்தமானதா? திரிபுரா காங்கிரஸ் தலைவர் ஆசிஷ் குமார் சாஹா கூறுகையில்,“மாதா திரிபுர சுந்தரி பாஜக வுக்கு மட்டுமே சொந்தமானது என்ற தோற் றத்தை உருவாக்கவே, எதிர்க்கட்சிகளை அழைக்காமல் மோடி மட்டுமே திறப்பு விழா வில் பங்கேற்றுள்ளார். வரும் காலத்தில் மாதா திரிபுர சுந்தரியை பிரச்சாரப் பொருளாக பயன் படுத்தவும் தொடங்கி விடுவார்கள்” என அவர் குற்றம்சாட்டினார்.