நக்சல் வேட்டை என்ற பெயரில் அதிகரிக்கும் போலி மோதல் கொலைகள்
கடந்த 22 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத் தில் சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் தண்ட காரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் தலைவர்க ளான கதாரி சத்யநாராயண ரெட்டி, கோசா, கட்டா ராமச்சந்திர ரெட்டி, ராஜு தாதா, விகல்ப் ஆகியோர் செப்டம்பர் 11 முதல் 20க்கு இடைப் பட்ட நாட்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. பின்னர் செப்டம்பர் 22 அன்று சத்தீஸ்கரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஒரு போலி மோதல் சம்பவத்தில் அவர்களில் இரண்டு தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன.
அவர்கள் ராய்ப்பூர் நகரத்திலோ அல்லது வேறு எங்கிருந்தோ நிராயுதபாணிகளாக ஒன்றா கவோ அல்லது தனித்தனியாகவோ அழைத்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படு கிறது. கொல்லப்படுவதற்கு முன்பு கட்சி பற்றிய ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக காவல் துறையினர் அவர்களை கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்த பிறகு காவல்துறை உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் காவல் துறையே நீதிமன்ற பொறுப்பையும் எடுத்துக் கொண்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
பாஜக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பேச்சு வார்த்தைக்கான மாவோயிஸ்ட்டுகளின் தொ டர்ச்சியான வேண்டுகோள்களை புறக்கணிப்பது சரியல்ல. ஏற்கெனவே, பல அரசியல் கட்சிகளும் அக்கறை கொண்ட குடிமக்களும் பேச்சுவார்த்தைக்கான அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அரசு அதை ஏற்காமல் ‘நிர்மூலமாக்கல்’ என்ற மனிதாபிமானமற்ற கொள்கையைப் பின் பற்றுவது சரியல்ல.
ஒன்றிய அரசின் நடவடிக்கை ஜனநாய கத்திற்கு எதிரானது. பாசிச மனநிலையை பிரதி பலிப்பதாக உள்ளது. எனவே நக்சல் எதிர்ப்புப் படையின் அனைத்து நடவடிக்கைகளையும் உட னடியாக நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைக் கான அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவேண்டும். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதி ரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் மேற் கொள்ளப்பட்ட நீதிக்கு புறம்பான நடவடிக்கை கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
மாவோயிசத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் குடிமக்களைக் கொல்வதற்கும், பெருநிறுவனக் கொள்ளைக்கு எதிரான பழங்குடி மக்களின் போராட்டங்களை அடக்கு
வதற்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ‘பெருமை’ கொள்வது மோசமான ஒன்றாகும்.
மாவோயிஸ்ட் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்து அதிகாரிகளுக்கு நம்பகமான தகவல் கிடைத்திருந்தால், சட்டப் பூர்வமாக அவர்களை கைது செய்திருக்கலாம். அதை விடுத்து படு கொலை செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே நக்சல்களுக்கு எதிரான முழு ‘ஆபரேஷன் ககார்’ மீதும் சுயேச்சையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.