சிபிஎம் மூத்த தலைவர் சிகுருபாடி பாபு ராவ்
புடமெரு சிறுகால்வாயில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமைதியாக இருக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக 10,000 கோடி ரூபாயை முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும்.
சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் பங்களிக்கவில்லை. அப்போது ஆர்எஸ்எஸ் எங்கே இருந்தது என்ற ஒரே கேள்வி தான் இன்னும் உள்ளது. அதனால் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-ஸின் பங்கு என்ன என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். மக்களிடமும் அதை விளக்கிக் காட்டட்டும்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்
காந்தியின் பாதையைப் பின்பற்றி, வாங்சுக் அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். காந்தியை கோட்சே கொன்றபோது, காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும் காந்தியவாதி வாங்சுக்கை காப்பாற்ற விரும்பினால், நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.
மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்
தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தசரா விழாவில் ஷர்ஜீல், உமர் காலித் ஆகியோரின் படங்கள் இராவணனின் முகங்களாக சித்தரிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இந்த இருவரும் பட்டம் பெற்ற அதே பல்கலைக்கழகத்தில் படங்கள் மூலம் எரிக்கப்பட்டுள்ளனர்.