states

கனமழை பாதிப்பு: மராத்வாடாவிற்கு ரூ.1,500 கோடி இழப்பீடு அறிவிப்பு

கனமழை பாதிப்பு: மராத்வாடாவிற்கு ரூ.1,500 கோடி இழப்பீடு அறிவிப்பு

நிவாரணம் போதாது என விவசாயிகள் எதிர்ப்பு

மும்பை மே மாதம் முதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கன மழையால் மகாராஷ்டிரா மாநிலத் தின் மராத்வாடா (அவுரங்கபாத்) மற்றும் தேஷ்  (புனே) பிராந்தியங்களில் உள்ள மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. சோயாபீன்ஸ், பருத்தி, உளுந்து, பாசிப் பயறு, துவரை மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் 2 பிராந்தியங்களில் உள்ள மாவட்டங்களில் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அதே போல அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை கள் மற்றும் கரும்புகளும் நீரில் மூழ்கியும், வேரோடு சாய்ந்துமுள்ளன. மராத்வாடா பிராந்தியத்தில் 27 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன. அதே போல தேஷ் பிராந்தியத்தின் சோலாப்பூரில் 1 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளின் பயிர்கள் நாசமாகி யுள்ளன. கனமழையால் விவசாயிகள் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு மராத்வாடா மற்றும் சோலாப்பூருக்கு மழைக்கால பாதிப்புக்கான நிவாரணம் தொடர்பான அறிவிப்பை கூட வெளியிடாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகளின் “மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், சிவசேனா - உத்தவ், தேசியவாத காங்கிரஸ் - சரத்) “ கூட்ட ணிக் கட்சிகள் பாதிக்கப்பட்ட இடங்களை, விவசா யிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் மராத்வாடா, தேஷ் பிராந்தியங்களில் உள்ள மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில் போராட்டம் நடத் தப்படும் என அறிவித்தனர். இந்நிலையில், போராட்ட அறிவிப்பால் மிரண்ட மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு மராத்வாடாவில் மே முதல் ஆகஸ்ட் வரை பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.1,500 கோடியை வழங்கு வதாக அறிவித்துள்ளது. தொகையை செலுத்து வதற்கான செயல்முறை தொடங்கிவிட்டதா கவும், பணம் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயி களின் கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் மராத்வாடா கோட்ட ஆணையர் ஜிதேந்திர பாபல்கர் தெரிவித்தார். ஆனால் ரூ.1,500 கோடி இழப்பீடு என்பது ஒரு சில ஏக்கர்களுக்கு வழங்கத்தான் பயன்படும் என்றும், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.