‘பாஜகவில் இணைந்தால் தான் நிதி வழங்குவோம்’ மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மிரட்டல்
மும்பை உச்சநீதிமன்ற உத்தரவால் மகாராஷ்டிராவில் அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் வாக்கு திருட்டு அம்பலாகியுள்ள தால் உள்ளாட்சி தேர்தலை சமா ளிப்பது என பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் (சிவசேனா - ஷிண்டே: தேசியவாத காங்கிரஸ் - அஜித்) புலம்பி வருகின்றன. மேலும் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளை “நிதி மிரட்டல்” மூலமாக தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடைபெற்று வரு வதாக தொடர்ச்சியாக குற்றச் சாட்டுகள் கிளம்பியுள்ளன. இதுதொடர்பாக சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில்,”மகாராஷ்டிராவின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக உள்ளது. கடனில் மூழ்கியுள்ள சூழ லிலும் மாநிலத்தில் நிதி ஒழுங் கின்மை நிலவுகிறது. தேர்ந்தெ டுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதி கள், மாநகராட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால், அவர்களுக்கு உடனடி யாக மேம்பாட்டு நிதி கிடைப்ப தில்லை. ஆனால் ஆளும் கட்சி பிரதி நிதிகளுக்கு மாநில முதலமைச் சர், துணை முதலமைச்சர் ஆகி யோரின் உத்தரவு மூலம் பெரும் நிதி வழங்கபடுகிறது. அதே போல தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள் ளாட்சி பிரநிதிகள் கூட மேம்பாட்டு நிதி பெறுகிறார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி எம்எல்ஏ, எம்.பி.,க்களுக்கும் இதே நிலை மை தான். இது மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஜன நாயகத்திற்கும் ஒரு மிகப்பெரிய அவமானமாகும். நான் எம்எல்ஏவாக இல்லா விட்டாலும், எனக்கு ரூ.20 கோடி நிதி கிடைக்கிறது என்று சதா சர வங்கர் (சிவசேனா - ஷிண்டே பிரிவு) போன்றவர்கள் துணிச்சலுடன் கூறு கிறார்கள். அதே போல எதிர்க் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த மாநகராட்சி உறுப்பி னர்களுக்கு சிறப்பு அழைப்பு மூலம் நிதி வழங்கப்படுகிறது. இது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிதி விநியோகம் ஆகும். ஆனால் எங்களுடன் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி (உள்ளாட்சி) உறுப்பி னர்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி கிடைப்பதில்லை. நிதி தொடர்பாக கோரிக்கை விடுத்தால் கட்சி மாறுங்கள், எங்கள் குழுவில் சேருங்கள், எங்கள் கட்சியில் சேருங்கள் என எதிர்க்கட்சி பிரதி நிதிகளை மிரட்டுகிறார்கள்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.