சிபிஎம் முயற்சி வெற்றி ஒடிசா பழங்குடியினத் தலைவர் சாலா மராண்டி விடுதலை
புவனேஸ்வரம் பாஜக ஆளும் ஒடிசா மாநி லத்தின் தலைநகர் புவ னேஸ்வரம் அருகே உள்ள “சாலியா சாஹி ஆதிவாசி கான்” பகுதியில் குடிசைவாசிகள் மற்றும் பழங்குடியினரின் உரிமை களுக்காக ஜனநாயக ரீதியில் போராடிய ஆதிவாசி அதிகார ராஷ்டிரிய மஞ்ச் (AARM) அமைப் பின் ஒடிசா மாநில பொதுச் செயலா ளரான சாலா மராண்டி கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் சிறையில் அவர் காவல் துறையின் தொடர் துன்புறுத்தல்க ளுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில், சாலா மராண்டி யின் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒடிசா மாநிலக் குழு கடும் கண்டனம் தெரிவித்து சட்டப் போராட்டத்தில் இறங்கியது. சிபிஎம் மூத்த தலைவரும், ஆதி வாசி அதிகார ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் துணைத் தலைவரு மான பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள், கட்டாக் காவல் ஆணையரை நேரில் சந்தித்து சாலா மராண்டியை விடுதலை செய்யாத காரணத்தை விளக்க மாக அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிபிஎம்-இன் தொடர் முயற்சியால் சாலா மராண்டி திங்களன்று இரவு 8 மணியளவில் சிறையில் இருந்து விடுதலை (ஜாமீன்) செய்யப்பட்டார். சிறையி லிருந்து விடுதலையான பிறகு, சாலா மராண்டி புவனேஸ்வரத்தில் உள்ள சிபிஎம் மாநிலக் குழு அலுவலகத்தில் உள்ள தோழர் சிவாஜி பட்நாயக் நினைவிடத் தில் மலர் தூவி மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து புகழ்பெற்ற பழங் குடியினப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கும் தனது மரியாதை யைச் செலுத்தினார். முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த சாலா மராண்டிக்கு சிபிஎம் தலை வர்கள், பழங்குடி மக்கள் சிறை வாச லில் உற்சாக வரவேற்பு அளித்த னர் என்பது குறிப்பிடத்தக்கது.
