100 வீடுகளுக்கான ஒப்பந்தமும் தொகையும் முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
திருவனந்தபுரம் நம்ம வயநாடு திட்டத்தின் கீழ் 100 வீடுகள் கட்டுவதற்காக சேகரிக்கப்பட்ட தொகை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வழங்கும் விழா மார்ச் 24 திங்களன்று மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் மத்திய விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இளைஞர்களின் அணி வகுப்பும் பொதுக்கூட்டமும் நடைபெறும். விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் மார்ச் 22 சனியன்று நடை பெற்றது. இதில் மாநில செயலாளர் வி.கே.சனோஜ், மாநிலத் தலைவர் வி. வாசிப் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மேலும் கூறுகையில், பேரி டரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக் காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 25 வீடுகளைக் கட்டித் தரும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது 100 ஆக அதிகரிக்கப்பட்டது. நாட்டிற்காக மேற் கொள்ளப்பட்ட இந்த மிகப்பெரிய முயற்சியின் மூலம் டிஒய்எப்ஐ ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. வீடு கட்டுவதற்கான பணத்தை டிஒய்எப்ஐ ஊழியர்கள் பழைய பொருட்கள் (ஆக்ரி) சேக ரித்தல், தேநீர் கடை நடத்துதல், சிறு சிறு வேலை கள் செய்தல், புத்தகங்கள் விற்றல், வாகனங்க ளை கழுவுதல் மற்றும் மீன் பிடித்து விற்றல் மூலம் தேடினர். நலம் விரும்பிகள் இந்த முயற்சி யில் கைகோர்த்து விருதுகள், உதவித்தொகை கள், சம்பளத் தொகைகள், திருமண விழாக்க ளுக்காக ஒதுக்கப்பட்ட பணம், நகைகள், நிலம் மற்றும் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடை களை நன்கொடையாக வழங்கினர். செய்தியாளர் சந்திப்பில் மாநில பொருளா ளர் எஸ்.ஆர்.அருண்பாபு, மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் ஷிஜு கான், மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி. அனூப், மாநிலக் குழு உறுப்பினர் வி. எஸ். ஷியாமா ஆகியோர் பங்கேற்றனர்.