states

img

சொந்த தொகுதியிலேயே ஜெயிக்காத அண்ணாமலை தெலுங்கானா, தமிழ்நாடு அரசுகளை கவிழ்ப்பாரா?

2024 மக்களவைத் தேர்தலில், பாஜக-வை வீழ்த்துவதற்கான வியூகங்களில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக தேசியக் கட்சி ஒன்றைத் துவக்கி, ஒத்த எண்ணம் கொண்ட பிராந்தியக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், சிவில் சமூக இயக்கங்கள், அறிவுஜீவிகள் ஆகியோரை ஒரணியில் திரட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.

கடந்த வாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம், முன்னாள் எம்எல்ஏ ஜூலகாந்தி ரங்காரெட்டி மற்றும் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் செருபள்ளி சீதாராமுலு ஆகியோரை கே. சந்திரசேகர ராவ் சந்தித்தார். தலைவர்களுக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு, “தெலுங்கானாவிலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ மத வெறுப்பை உருவாக்கும் எந்த முயற்சியையும் முறியடிக்க ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கே.சி. சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்தார்.

மேலும், மத அடிப்படையிலான அரசியல் அணி திரட்டலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுஜீவிகளை கேட்டுக் கொண்ட கே.சி. சந்திரசேகர ராவ், அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் தனது அழைப்புக்கு ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

கே.சந்திரசேகர ராவ் கிண்டல் ஹைதராபாத், செப்.12- தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை, பாஜக-வுக்கு எதிரான கட்சிகளை நாகரிகமற்ற முறையிலும், வாய்க் கொழுப்பாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவையும் அண்மையில் வம்புக்கு இழுத்திருந்தார். “மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்க ரேவிற்கு ஏற்பட்ட நிலைமைதான் தெலுங் கானாவில் கேசிஆருக்கு ஏற்படும்”  என்று கூறியதுடன், “மகாராஷ்டிரா வில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்தது போல தமிழ்நாட்டிலும் திமுக வில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே  புறப்படுவார்” என்று பயமுறுத்தி யிருந்தார். “பாருங்க இன்னும் ஒரு மாதம்தான். எங்களிடம் ஒரு ஏக்நாத் ஷிண்டே இல்லை. நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே புறப்படத் தயாராக இருக்கிறார். உதயநிதியை அமைச்சராக்கினால் திமுக-வில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார். சிவசேனா வேறு - திமுக வேறு என்று இவர்கள் கூறுவார்கள், ஆனால் இங்கும் ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்” என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெலுங் கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏ-க்களை வைத்து இருக்கிறோம், நட்புக் கட்சிகளோடு எங்களுக்கு 110 எம்எல்ஏ-க்கள் பலம் உள்ளது. ஆனால், எங்கள் அரசை கவிழ்ப்போம் என்றும் அண்ணாமலை கூறுகிறார். ஏக்நாத் ஷிண்டே வகை அரசியல்தான் உங்களின் அரசியலா? இதுதான் உங்களின் ஜனநாயகமா? இதுதான் நீங்கள் அரசியல் நடத்தும் விதமா?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக பாஜக கூறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கூட ஏக்நாத்  ஷிண்டே வரப் போவதாக அண்ணா மலை சொல்கிறார். அவரால் அவரின் சொந்த தொகுதியில் (அரவக்குறிச்சி) கூட வெற்றிபெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியை பெற முடியாத அண்ணாமலைதான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்கப் போவதாக கூறுகிறார்” என்றும் சந்திர சேகர ராவ் கிண்டலடித்துள்ளார்.