காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் பைலட்
காரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பரிதாபமாகத் தவறிவிட்டது. இளைஞர்களுக்கு வேலை வழங்கவும் தவறிவிட்டது. பல ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமார், மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலையின்மைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஷியா குரு மௌலானா கல்பே ஜவாத்
வக்பு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து நிதிஷ் குமாரும், சந்திரபாபுவும் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். ஏனெனில் அவர்களால் தான் மோடியின் 3.0 அரசு நடக்கிறது. நிதிஷ் குமாரும், சந்திரபாபுவும் வாக்களிக்காவிட்டால், வக்பு மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்திருக்கும்.
ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்
அதானிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தாராவியின் புனரமைப்பு திட்டத்தின்படி, ‘தகுதி’ வாய்ந்த மக்கள் ‘புனரமைக்கப்பட்ட’ தாராவியிலேயே தங்க வைக்கப்படுவார்களாம். ‘தகுதியற்ற’ மக்கள் குப்பை கிடங்கு அல்லது உப்பளங் களுக்கு அருகே தங்க வைக்கப்படு வார்களாம். எப்படி இந்த அறிவிப்பு?
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால் ஒன்றிய அரசு விதிக்கத் தயாராகும் கட்டுப்பாடுகள், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.