states

img

மகளிர் அமைப்புகள் கண்டனம்

மகளிர் அமைப்புகள் கண்டனம்

சமூக ஊடகப் பதிவிற்காக முஸ்லிம் பேராசிரியர் கைது

புதுதில்லி ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மைக்காக அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர்.அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தேசிய மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊட கத்தில் கருத்து தெரிவித்தமைக்காக ஹரியானா மாநிலத்தில் இயங்கும் அசோகா பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதா பாத் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையா கக் கண்டிக்கின்றோம். இந்த தேவையற்ற நடவ டிக்கைக்கு முன்பாக மிகவும் விசித்திரமான முறையில் ஹரியானா மாநில மகளிர் ஆணை யத்தால் 2025 மே 12 அன்று அவருக்கு ஓர் அழைப் பாணை அனுப்பப்பட்டு, சோனிபட் காவல் நிலை யத்தால் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நோட்டீஸில் அவரது பதிவுகள் ‘தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை’ என் றும், ‘பெண்களின் கண்ணியத்தை மீறுவதா கவும், அடக்கத்தை அவமதிப்பதாகவும்’ குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், அவர் மீது ‘தேசத்துரோக’ குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள் ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துன்புறுத்தும் முயற்சி

இந்த நோட்டீசும் அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவ தற்கான தேவையை ஆதரித்த ஒரு கல்வியா ளரைத் துன்புறுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியாக நாங்கள் கருதுகி றோம். அவர் பதிவேற்றம் செய்துள்ளதாகக் கூறப்படும் பதிவுகள், ஆயுதப்படைகளின் தியா கங்களை வெளிப்படையாகப் பாராட்டுகின்றன. மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானை பொறுப்பேற்க வைப்பதில் அர சாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டுகின்றன. தேசிய ஒற்றுமையைக் கொண்டாடவும், மதப் பிரிவினை இலக்கு மற்றும் மதவெறித் தீயை விசிறிவிடும் போக்கிற்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவ தற்கும் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தலைமையிலான பத்திரிகையாளர் சந்திப்பின் உதாரணத்தை மஹ்முதாபாத் பயன்படுத்தியிருக்கிறார்.

பெண்கள் மீதான தாக்குதல்களும் அமைதி காக்கும் ஆணையமும்

டாக்டர். மஹ்முதாபாத்தின் கைது, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். பாஜக தலைமையிலான அர சாங்கம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மத சமூ கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள் மற்றும் ஆர்வலர் களை குறிவைக்க காவல்துறை மற்றும் மாநில மகளிர் ஆணையம் போன்ற சட்டப்பூர்வ நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவ தற்கான மற்றொரு உதாரணமாக இதை நாங் கள் கருதுகிறோம். ஹரியானாவில் பெண்கள் மீதான அதிகரித்து வரும் அட்டூழியங்கள் குறித்து அதே ஹரியானா மாநில மகளிர் ஆணை யம் அமைதியாக உள்ளது. அலி கான் மஹ்முதாபாத்தை உடனடியா கவும் நிபந்தனையின்றி விடுவிக்கவும், அவ ருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையைத் திரும்பப் பெறவும் வேண்டும் என்றும் கோரு கிறோம்” இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.         (ந.நி.)