states

img

அதானி போன்ற செல்வந்தர்களுக்கு மட்டும் சட்டங்கள் தளர்த்தப்படுகின்றன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

அதானி போன்ற செல்வந்தர்களுக்கு மட்டும் சட்டங்கள் தளர்த்தப்படுகின்றன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

புதுதில்லி 2021இல் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கடன் பத்திரங்கள் வெளியிட்டபோது, முதலீட்டா ளர்களிடம் தவறான மற்றும் மோசடியான (ரூ.2,400 கோடிக்கும் அதிகமாக) தகவல்களை அளித்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், நியூயார்க் நீதி மன்றத்தில் (அமெரிக்க மாநில நீதிமன்றம்) வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு தொடர்பாக அதானி குழும தலைவரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான கவுதம் அதானி, அவரது மரு மகன் சாகர் அதானி ஆகியோருக்கு இந்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு நியூயார்க் நீதிமன்றம் நோட்டீஸ் மூலம் சம்மன்களை அனுப்பியது. 2025 மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நியூயார்க் நீதிமன்றம் அனுப்பிய 2 சம்மன்களையும் இதுவரை அதானிக்கு மோடி அரசின் சட்டத்துறை அமைச்சகம் வழங்க வில்லை. சம்மன் அனுப்பாதது தொடர்பாக மோடி அரசு,“சம்மன் கடிதத்தில் நேரடி கையொப்பம் இல்லை ;  அலுவலக அதிகாரப்பூர்வ முத்திரை இல்லை; சம்மன் வழங்குவது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபணைகள் உள்ளன. இதனால் சம்மனை அதானிக்கு வழங்கவில்லை” என மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளது. மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் இந்நிலையில், ஹேக் ஒப்பந்தத்தின் (சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையே சட்ட ரீதியான ஒத்துழைப்பை உறுதி செய்வ தற்கான பன்னாட்டு ஒப்பந்தம்) கீழ் சம்மன் அனுப்ப எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்திய அரசின் தொழில்நுட்ப காரணங்களால் தோல்வி யடைந்ததால், அதானிக்கு மின்னஞ்சல் மூலம் சம்மன்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க உச்சநீதிமன்ற (பெடரல் நீதிமன்ற) நியூயார்க் கிளையில், அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. ரூ.1 லட்சம் கோடி இழப்பு அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என்று மறுத்துள்ளது. மேலும், அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவ னம்,”இது ஒரு சிவில் வழக்கு மட்டுமே. ஊழல்  அல்லது லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லை” என்று விளக்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரங்கள் காரணமாக, வெள்ளி யன்று பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவ னங்களின் பங்குகள் 3.3% முதல் 14.6% வரை சரிவைச் சந்தித்தன. அதாவது அதானிக்கு 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் இழப்பு ஏற்பட்டது. சிபிஎம் கண்டனம் இந்நிலையில், அதானி போன்ற செல் வந்தர்களுக்கு மட்டும் சட்டங்கள் தளர்த்தப் படுகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொ டர்பாக சிபிஎம் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் சம்மன் களை அதானிக்கு வழங்க சட்ட அமைச்சகம் வெட்கக்கேடான முறையில் மறுத்திருப்பது, கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்தி ற்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. அதிருப்தியாளர்களுக்கு எதிராக சட்டங்கள் ஆயுதமாக்கப்படுகின்றன. ஆனால் செல் வந்தர்களுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக் கும் அவை தளர்த்தப்படுகின்றன. இது நிர்வாகம் அல்ல; இது அப்பட்டமான கூட்டுக் களவாணி முத லாளித்துவம் ஆகும்” என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.