உதய தின விழாவுக்கு மக்கள் வரிப்பணம் வாரி இறைப்பு சத்தீஸ்கர் அரசின் ஒருநாள் விளம்பரச் செலவு ரூ.6.90 கோடி
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக விஷ்ணு தேசாய் உள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று சத்தீஸ்கர் மாநி லத்தின் 25ஆவது உதய ஆண்டு விழா கொண்டாட்டம் அனுசரிக் கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சாலை, தொழில், சுகாதாரம் மற்றும் எரி சக்தித் துறைகளில் மொத்தம் ரூ. 14,260 கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில், இந்த கொண் டாட்டத்திற்காக சத்தீஸ்கர் பாஜக அரசு மேற்கொண்ட விளம்பர செலவு தொடர்பான பட்டியலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என சமூக ஆர் வலர் அஜய் வாசுதேவ் போஸ் மாநில மக்கள் தொடர்புத் துறைக்கு விண்ணப்பித்தார். அதில்,”நவம்பர் 1, 2024 அன்று நடைபெற்ற சத்தீஸ்கர் உதய தின விழாவின், ஒரு நாள் விழாவிற் காக தேசிய மற்றும் பிராந்திய செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய ரூ.4.97 கோடியும், தொலைக் காட்சி சேனல்களில் விளம்பரம் செய்ய ரூ.1.39 கோடியும், சாலை களில் விளம்பரப் பலகைகள் மற் றும் பேனர்கள் வைக்க ரூ. 53 லட்ச மும் என மொத்தம் 6.90 கோடி ரூபாய்க்கும் (ரூ.6,90,83,385) மேல் செலவு செய்யப்பட்டுள்ளது என சத்தீஸ்கர் மாநில மக்கள் தொடர் புத்துறை தெரிவித்துள்ளது. அஜய் வாசுதேவ் கண்டனம் ஒருநாள் விழாவின் விளம்ப ரத்திற்கு மக்கள் வரிப்பணம் ரூ. 6.90 கோடி விளம்பரம் செய்யப் பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் கூறுகை யில்,”கல்வி, மருத்துவம் மற்றும் பொதுக் கட்டுமானப் பணிகளுக்கு நிதி இல்லை என்று கூறி பட்ஜெட் டில் வெட்டுக்கள் செய்யப்படும் சூழலில், ஒருநாள் விழாவின் விளம் பரத்திற்காக மட்டும் 7 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைச் செலவிடு வது ஏற்புடையதல்ல” என அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 428 நாட்களில் அரசு ரூ.332.92 கோடி முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப் பூர்வ அறிக்கையில், டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரையிலான 428 நாட்களில் அரசு (சத்தீஸ்கர் பாஜக) ரூ.332.92 கோடி செலவிடப் பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு நாளைக்குச் சராசரியாக 78 லட்சம் ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடப்படுவதைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
