சண்டிகர் மசோதா: பின்வாங்கிய மோடி அரசு
டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் 10 மசோ தாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ள தாகவும், அதில் சண்டிகருக்கு தனி ஆளுநர் நியமிக்கும் வகையில் 131ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப் படுத்தப் போவதாகவும் ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டு அறி விப்பை வெளியிட்டது. இந்த மசோதா மூலம் பஞ்சாப்பிடம் இருந்து சண்டிகரை பறிக்க முயற்சிப்ப தாக ஒன்றிய மோடி அரசு மீது ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், ஞாயிறன்று மாலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடா ளுமன்றத்தில் சண்டிகர் யூனியன் பிரதேச மசோதா தாக்கல் செய்யப்பட மாட்டாது என அறிவித்தது.