குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து செப்., 9ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்த லில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பா ளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். குடியரசுத் துணைத் தலைவர் பதவியேற்பு விழா, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக் கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு (நாட்டின் 15ஆவது குடியரசுத் துணைத் தலைவர்) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த பதவிக்கு சம்பளம் எதுவும் நிர்ண யிக்கப்படவில்லை, என்றாலும் மாநி லங்களவை தலைவர் என்ற அடிப்படை யில் அவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்ப ளம் கிடைக்கும். உறைவிடம், மருத்து வம், பயணம் உள்பட பல சலுகைகளு டன், ஓய்வுக்குப் பிறகு சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தன்கரும்... குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்பு கடந்த 2 மாதம் காலமாக பொதுவெளி யில் தலைகாட்டாமல் இருந்த ஜகதீப் தன்கர், தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். முன்னாள் குடியரசு துணைத் தலை வர்கள் வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி ஆகியோருடன் ஜகதீப் தன்கர் அமர்ந்திருந்தார்.