சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்
என் மகனுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என நடிகர் சிரஞ்சீவி கூறியது கண்டனத்துக்குரியது. நமது நாட்டில் இதுபோன்ற ஆணாதிக்க கலாச்சாரங்கள்தான், மருமகள் மீது ஒரு மகனைப் பெற அழுத்தம் கொடுக்கின்றன. பெண் கருவை கலைக்க பெண்களை கட்டாயப்படுத்துகின்றன.
ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று கைது செய்துள்ளது தில்லி காவல்துறை. ஏன் இந்த அடக்குமுறை?
திமுக எம்.பி., ஆ.ராசா
வக்பு சட்டத்திருத்த மசோதா மீதான அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை நீக்கியதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படியானால் அதனை நீக்க உத்தரவிட்டது யார்? முன்னுக்குப் பின் முரணாக ஒன்றிய அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய்
ராணுவத்தின் எதிர்ப்பையும் தாண்டி அதானியின் திட்டத்துக்கு இந்திய எல்லையில் இடம் அளித்திருக்கிறது ஒன்றிய அரசு. போலி நாட்டுப்பற்றும் பொய் தேசியவாதமும் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. தேசியம் பேசி வாக்கு சேகரிப்பார்கள். ஆனால் அதானிக்கு தேவை என்றால் தேச பாதுகாப்பையே அவர்கள் பலி கொடுப்பார்கள்.