states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய யு-19 ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 4 நாட்கள் போட்டிகள் (Multi Day matches) கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த தொட ருக்கான, இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே (ஐபிஎல் - சென்னை) கேப்டனாக நியமிக் கப்பட்டுள்ளார். அதே போல 16 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் (ஐபிஎல் - ராஜஸ்தான்) இடம் பெற்றுள்ளார்.

மே மாதத்தில் கேரளாவில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள் ளது. இதனால் கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி,”எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் யூனி யன் பிரதேசத்திற்கு ஒருங்கி ணைந்த உயர்நீதிமன்றம் செயல் பட்டு வருகிறது. சண்டிகர் நகரில் செயல் பட்டு வரும் இந்த நீதிமன்றம் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாப் - ஹரியா னா உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் மின் னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை அன்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். உடனடியாக சண்டிகர் காவல்துறை நீதிமன்ற வளாகங்களில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோரை வெளி யேற்றி, பொது நுழைவை தற்காலிகமாக தடை செய்து சோதனை நடத்தியது.  சோதனை முடிவில் வெடிகுண்டு போன்ற பொருட்கள் எதுவும் சிக்காத நிலையில், இது வெறும் புரளி என சண்டிகர் காவல்துறை அறிவித்துள்ளது.

“2027 உ.பி., சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்”

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக் கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகை யில்,“1,93,000 ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்த விளம்பரம் பாஜகவையே தாக் கும். 2027 தேர்தலில் பாஜகவின் தோல்வி க்கான அரசியல் எண்கணிதம் இது தான். 1,93,000 ஆசிரியர்கள் பணியிட விவகா ரத்தில் ஒரு பதவிக்கு குறைந்தது 75 வேட்பாளர்கள் என்று வைத்துக்கொண் டால், அப்போது இந்த எண்ணிக்கை 1 கோடியே 44 லட்சத்து 75,000. ஆசிரியர் தேர்வர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தில் இருப்பவர்களையும் சேர்த்து வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணி க்கை 3 என மதிப்பிட்டால், இந்த எண்ணிக் கை 4 கோடியே 34 லட்சத்து 25,000. 4 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களை உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டமன்ற இடங்களால் வகுத்தால்,  இந்த எண்ணிக்கை ஒரு தொகுதிக்கு சுமார் 1,08,000 என்ற அளவில் வரும். இவர்களில் பாதி பேர் பாஜக வாக்கா ளர்கள் என்று எடுத்துக்கொண்டால் (பாஜகவினர் கூறியது போல) கூட, மீதமுள்ள 54,000 வாக்குகளை (ஒரு தொகுதிக்கு) பாஜக இழப்பது உறுதி. உத்தரப்பிரதேச மக்கள் பாஜக அரசாங் கத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். வேலையின்மை, பணவீக்கம், பெண்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஊழல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள், பாஜகவுக்கு எதிரான மனநிலை யில் இருக்கிறார்கள். எனவே 2027 தேர்த லில் பாஜக தோல்வி அடைவது உறுதி.  பிற்படுத்தப்பட்டோர் - தலித்துகள் - சிறுபான்மையினர் இணைந்த எங்கள் அரசை நாங்கள் 2027இல் அமைப் ்போம்” என அவர் கூறினார்.

ரஜோரியில்  பள்ளிகள் திறப்பு

பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜம்மு-காஷ்மீ ரின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 15 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. போர் பதற்றம் தணிந்து இயல்புநிலை திரும்பி வரும் சூழ்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்படத் தொடங்கின. ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலின் போது பள்ளி கட்டடங்க ளும் சேதமடைந்தன. அவற்றை தற்போது முடிந்தவரை சரிசெய்யப் பட்டுள்ளதாகவும், மாணவர்கள் எந்த வித பயமும் இன்றி பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக ரியாசி மாவட்டத்தில் கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.