states

img

அதானியின் ரூ. 17 லட்சம் கோடி ஊழல் ‘செபி’ தலைவர் மாதவியைத் தப்பவிட பாஜக தீவிர முயற்சி!

புதுதில்லி, அக். 24 - கவுதம் அதானியின் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி பங்குச்சந்தை மோசடி யில் தொடர்பு கொண்டவராக கூறப்படும் ‘செபி’ தலைவர் மாதவி புரி புச், நாடாளு மன்ற பொதுக் கணக்குக் குழு விசார ணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துள் ளார். ‘செபி’ தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர், மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் பல்லாயிரக்கணக் கான பங்குகள் வைத்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2024 ஆகஸ்டில் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இதனிடையே, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியரான மாதவி, செபியில் இணைந்த பிறகும், ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ரூ. 16.8 கோடி வரை ஊதியமாக பெற்றதாக காங்கிரஸ் ஒரு குற்றச்சாட்டை  எழுப்பியது. மேலும், அகோரா அட்வைஸ் சரி மற்றும் அகோரா பார்ட்னர்கள் என்ற  இரு நிறுவனங்களில் 99 சதவிகிதம் பங்குகளை மாதவி புரி புச் வைத்துள்ள தாகவும், மாதவி புச்சுக்கு சொந்தமான அகோரா நிறுவனம், மகேந்திரா & மகேந்திரா, ஐசிஐசிஐ, டாக்டர் ரெட்டீஸ், பிடிலைட் ஆகிய நிறுவனங்களிடம் பணம் பெற்றுள்ளது என்றும் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்தன. ஐசிஐசிஐ வங்கியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், அதற்கான ஓய்வூதிய பலன்களை மட்டுமே பெற்றதாகவும் சமாளித்தாலும், செபியின் முழுநேர உறுப்பினராக இருக்கும் போதே ரூ. 16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக பெற்றுள்ளார். மேலும் ஊழியர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் பங்குகளையும் ஐசிஐசிஐ வங்கியில் பெற்று பயனடைந்துள்ளார். இது செபியின் 54-ஆவது பிரிவை மீறு வது ஆகாதா? என்ற கேள்விகளுக்கு பதி லில்லை. மாதவி புரி புச்-க்கு எதிரான முறைகேடு புகாரை, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அவரை நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியது. அதன்படி வியாழனன்று (அக்.24) காலை பொதுக் கணக்கு குழு முன் செபி  தலைவர் மாதவி புரி புச் மற்றும் உறுப்பின ர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவர்கள் ஆஜராக வில்லை. “வியாழனன்று காலை 9.30 மணி வாக்கில் செபி தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தனிப்பட்ட அவசர நிலை காரண மாக இன்று தில்லிக்குப் பயணம் செய்ய இயலாது என்று தெரிவித்தனர். ஒரு பெண்ணிடம் இருந்து இந்த கோரிக்கை வந்துள்ளதால், நாங்கள் இன்றைய கூட்டத்தை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறோம்” என்று  குழுவின் தலைவர் கே.சி. வேணு கோபால் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் பொதுக் கணக்குக் குழு  முன்பு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத் திருக்கும் செபி தலைவர் மாதவிக்கு ஆதர வாக பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் பேசி யுள்ளார். “சிஏஜி அறிக்கையை விவாதிப் பதே பொதுக் கணக்கு குழுவின் வேலை.  சிஏஜி அறிக்கையில் செபி பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தாமாக முன்வந்து தன்னிச்சையாக சில விஷ யங்களை கே.சி. வேணுகோபால் செய்கிறார்” என்று அங்கலாய்த்துள்ளார். மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த பொதுக் கணக்கு குழு உறுப்பினர்களும், ஊழல் பேர்வழி மாதவி புரி புச்சை, குற்றச்சாட்டு மற்றும் தண்டனையிலிருந்து தப்பவிடும் வகையில், கே.சி. வேணுகோபாலுக்கு எதிராக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார்  அளித்துள்ளனர்.