மேற்குவங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டு மீண்டும் அம்பலமானது
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநி லத்தின் கல்வித் துறை அமைச்சர் பிரத்யபிரதா பாசு ராய் சவுத்ரி ஜாதவ்பூர் பல்கலைக்கழ கத்துக்கு மார்ச் 1 அன்று வருகை தந்தார். அப்போது பல்கலைக்கழ கத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தக் கோரியும், மாநிலம் முழு வதும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக்கோரியும் இந்திய மாண வர்கள் சங்கம் சார்பில் மாணவர் கள் போராட்டம் நடத்தினர். அப் போது கல்வி அமைச்சரின் வாகனம் போராடிக் கொண்டிருந்த மாண வர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் இந்திரனுஜ் ராய் என்ற முத லாமாண்டு மாணவர் அமைச்ச ரின் கார் மோதியதில் படுகாயத்துட னும்,5க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயத்துடனும் கொல் கத்தா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் வன்முறை
இந்நிலையில், திங்களன்று கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி மேதினிபூர், சிலிகுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள பல்கலைக்கழக வளா கங்களில் வகுப்புகளைப் புறக்க ணிக்கும் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் இடதுசாரி மாணவர் அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி னர். அப்போது திரிணாமுல் காங்கி ரஸ் மாணவர் பிரிவு (டிஎம்சிபி) வன்முறையை தூண்டிவிட்டது. இந்த வன்முறையின் போது இடது சாரி மாணவ அமைப்பின் தலை வர்கள், மாணவர்கள் மீது டிஎம்சிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இடதுசாரி மாணவ அமைப்பின் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன.
பாஜகவும் போராட்டம்
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை அன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்புக்கு மறைமுக ஆதரவாக பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யும் மாநிலத் தின் பல்வேறு பல்கலைக்கழக வளா கங்களில் போராட்டம் நடத்தியது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டு மீண்டும் அம்பலமாகியுள்ளது.
போராட்டம் தொடரும் ; எஸ்எப்ஐ
“டிஎம்சிபி, ஏபிவிபி-யின் குண்டர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவோம். மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யபிரதா பாசு ராஜினாமா செய்யும் வரை போராட் டங்கள் தொடரும். அதில் பின்வாங்க மாட்டோம்” என்று மேற்கு வங்க இந்திய மாணவர் சங்கம் கூறியுள்ளது.