பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி
சட்டமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். ஆனால் பீகார் பாஜக கூட்டணி அரசாங்கம் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது முதலமைச்சர், இரண்டு துணை முதலமைச்சர்களில் யாரும் சட்டமன்றத்தில் இல்லாதது இதுவே முதல் முறை என்று நான் நம்புகிறேன். உண்மையைக் கேட்கத் தைரியம் இருக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கும் ஒரு மதச்சார்பற்ற நாடு. இதுபோன்ற சூழ்நிலையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனைத்து மதங்களைப் பின்பற்றுபவர்களையும் எந்தவித பாரபட்சமும்
இல்லாமல் சமமாக நடத்த வேண்டும். ஆனால் மத விஷயங்களில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை நியாயமானது அல்ல.
“அனோரா” திரைப்பட இயக்குநர் சீன் பேக்கர்
பாலியல் தொழிலாளர் சமூகத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதற்காக எனது மிகுந்த மரியாதையை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். ஆஸ்கர் விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
காங்கிரஸ் எம்.பி., வர்ஷா கேய்க்வாட்
சட்டமன்றம் முதல் பீட் மாவட்ட மற்றும் மகாராஷ்டிரா மக்கள் வரை அனைவரும் சந்தோஷ் தேஷ்முக்கிற்கு நீதிக்காக குரல் எழுப்பினர். அதனால் தான் மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா செய்துள்ளார்.