states

img

மேற்குவங்கத்தில் ராம நவமி ஊர்வலம் மூலமாக மத வன்முறையை கிளப்ப பாஜக திட்டம்

மேற்குவங்கத்தில் ராம நவமி ஊர்வலம் மூலமாக மத வன்முறையை கிளப்ப பாஜக திட்டம்

மேற்குவங்க மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு மார்ச்  அல்லது ஏப்ரல் மாதத்  தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. இந்த தேர்தலுக்காக அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ராம  நவமி ஊர்வலம் மூலமாக அம்மாநி லத்தில் மத வன்முறையை தூண்ட  பாஜக திட்டமிட்டுள்ளது. வடமாநிலங்களில் ஏப்ரல் 6ஆம்  தேதி ராம நவமி கொண்டாடப்பட  உள்ளது. ஆனால் மகாராஷ்டிரா,  குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிர தேசம், மத்தியப்பிரதேசம், ஹரி யானா உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டுவது போல மேற்கு மாநி லத்தில் ராம நவமியை பெரியள வில் கொண்டாட மாட்டார்கள். கார ணம் மேற்கு வங்க மக்கள் காளியை  முக்கிய கடவுளாக வணங்குகின்றனர். இத்தகைய சூழலில் ஏப்ரல் 6  அன்று ராம நவமி கொண்டாட்டத் தின் போது 2,000 ஊர்வலங்கள் நடைபெறும் என அம்மாநில பாஜக  தலைவர் சுவேந்து அதிகாரி கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”ஏப்ரல் 6 அன்று மேற்கு வங்கத்தில் 2,000 ராம நவமி ஊர்வலங்களில் நடை பெறும். சுமார் 1 கோடி இந்துக்கள் பங்கேற்பார்கள்.

ராம நவமி ஊர்வ லங்களை நடத்துவோர் திரிணா முல் காங்கிரஸ் அரசு நிர்வாகத்தி டம் அனுமதி கேட்க வேண்டாம்” என அவர் கூறினார். அனுமதி கேட்  காமல் ஊர்வலம் நடத்திக்கொள்  ளுங்கள் என பாஜக அறிவித்துள்ள தால், வன்முறையை தூண்டவே சட்டமன்ற தேர்தலுக்கு முன் அர சியல் ஆதாயத்திற்காக வன்முறை யாக தூண்டவே ராம நவமி தினத்  தன்று 1 கோடி பேரை களமிறக்கு கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.  வெளிமாநிலங்களில் குண்டர்களை இறக்க திட்டம்? கடந்த ஆண்டு மேற்கு வங்க  மாநிலத்தில் நடைபெற்ற 1,000க்கும்  மேற்பட்ட ராம நவமி ஊர்வலத்தில் 50,000 பேர் பங்கேற்றனர். சிறிய எண்ணிக்கையில் பங்கேற்ற இந்த  ராம நவமி ஊர்வலத்திலேயே மேற்கு வங்க மாநிலத்தின் பெரும் பாலான இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.  ஆனால் இந்த ஆண்டு 1 கோடி பேரை ராம நவமி ஊர்வலத்தில்  களமிறக்கப் போவதாக பாஜக அறி வித்துள்ளது. மேற்கு வங்கத்தில்  வன்முறையை கிளப்ப 1 கோடி  குண்டர்கள் கிடைக்காது என்ப தால், குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  குண்டர்களை திரட்ட பாஜக திட்ட மிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து விரட்டப்பட்ட பாஜக ஆதரவு ரிபப்ளிக் நிருபர்கள்

மார்ச் 1 அன்று மேற்கு வங்க  கல்வித்துறை அமைச்சர்  ஜாதவ்பூர் பல்கலைக்கழகத் துக்கு பயணம் செய்த போது, மாணவர் சங்கத்  தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில்  மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி னர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த சில நபர்கள் அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது  தாக்குதல் நடத்தினர்.  குறிப்பாக மாநில  கல்வி அமைச்சரின் வாகனம் போராடிக் கொண்டிருந்த மாணவர்களின் கூட்டத்திற் குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் ஒரு மாண வர் பலத்த காயமடைந்த நிலையில், 6க்கும்  மேற்பட்ட மாணவர்கள் லேசான காயமடைந்த னர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரி வித்து மேற்குவங்க மாநிலம் முழுவதும் இந்  திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாண வர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாதவ்பூர் பல்கலைக்கழ கத்தில் மீண்டும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், மாணவர்களை “அர்பன் நக்சல்ஸ் (நகர்ப்புற நக்சல்), ஆன்ட்டி நேஷ னல்ஸ் (தேச பற்றற்றவர்கள்)”  என கேலி கிண்டல் செய்து பல்கலைக்கழகத்திலேயே அவதூறாக செய்தி வெளியிட்ட பாஜக ஆத ரவு பெற்ற மற்றும் பிரதமர் மோடிக்கு நெருக்க மான ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிரு பர்களை ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாண வர்கள் அடித்து விரட்டினர். மேலும் ஜாதவ்பூர்  காவல்நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.