weather

img

தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்!

சென்னை,மார்ச்.17- தமிழ்நாட்டில் இன்று வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.