சென்னை,மார்ச்.17- சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்ததாகச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையிலா தீர்மானம் விவாதத்திற்கு வந்தது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போதுமான ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வியடைந்தது என துணை சபாநாயகர் பிச்சாண்டி சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசுகையில்; அற்புதமான பேரவைத் தலைவர் கிடைத்திருக்கிறார்; கேள்விகள் கேட்கும் போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தடுமாற்றம் வரும்; அதை முறைப்படுத்தி உதவுபவர் சபாநாயகர்; அவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது; இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தனது கருத்தை முன்வைத்தார்.