லடாக் வன்முறைக்கு பாஜக தான் காரணம்
லடாக் போராட்டம், வன்முறை க்கு பாஜக தான் காரணம் என ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொ டர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “லடாக்கில் நீடிக்கும் போராட்டம் பாஜக வின் நிறைவேற் றப்படாத தேர்தல் வாக்குறுதிகளின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். லடாக்கை அரசிய லமைப்பின் 6ஆவது அட்டவணையின் கீழ் சேர்ப்பதாக பாஜக உறுதியளித் த்திருந்தது. ஆனால் இந்த பொய்யான வாக்குறுதிகளால் லடாக்கில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக தனது உறுதிமொழிகளை நிறைவேற்றியிருந்தால் போராட்டம் வன்முறையாக மாறியிருக்காது. வன்முறைக்கு நாங்கள் தான் காரணம் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு லடாக்கியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பாஜக காங்கிரஸ் மீது பழியைப் போட்டு திசைதிருப்ப முயற்சிக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.