துரத்தும் தோல்வி பயம் அசாமில் இலவச வாக்குறுதிகளை வாரி இறைக்கும் பாஜக
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தோல்வி பயத்தில் உள்ள ஆளும் பாஜக அரசு தேர்தலுக்கு முன்னரே மக்கள் வரிப் பணத்தை இலவசமாக அள்ளிவீசி வருகிறது. அசாம் மக்களுக்கு பிப்ரவரி மாதம் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடி யாக செலுத்தப்படும் அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அடுத்தடுத்து வெளி யிட்டு வருகிறார். அசாமில் உள்ள 37 லட்சம் பெண்களுக்கு தலா ரூ. 8,000 தொகை, பி.எட். பயிலும் மாணவர்க ளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, முது கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்க ளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, முதுகலை பட்டம் பெற்ற மாணவர்க ளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1,250 உதவித்தொகை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என இலவச வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளது அம்மாநில பாஜக அரசு.
