states

img

தில்லியில் மீன் கடைகளை இழுத்து மூடும் பாஜக குண்டர்கள்

தில்லியில்  மீன் கடைகளை  இழுத்து மூடும்  பாஜக குண்டர்கள்

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலத்தைப் போன்று தில்லியும் ஆகிவிட்டது. முகலாய மன்னர்களின் பெயரில் உள்ள சாலை களின் பெயர்களை மாற்றுவது, முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் நடத்தி வரும் இறைச்சிக் கடைகளை மறைமுக மிரட்ட லுடன் மூடுவது என பல்வேறு அராஜக சம்பவங்களில் பாஜக குண்டர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தில்லியின் சித்த ரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் மீன் கடைகளையும் பாஜக குண்டர்கள் மூடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான மஹுவா மொய்த்ரா கூறுகையில்,”தில்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிஆர் பார்க் பகுதியில் பெங்காலி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் வாழும் இடத்தில் இருந்த மீன் மற்றும் இறைச்சி கடைகள் அடாவடியாக மூடப் பட்டுள்ளன. பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள், அப்பகுதியில் அமைந் துள்ள கோவிலுக்கு அருகே மீன் வியா பாரம் செய்யக்கூடாது என வியாபாரி களை மிரட்டியுள்ளனர்” என்று குறிப் பிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள் ளார். அந்த வீடியோவில், காவி நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்த ஒரு நபர், சிஆர் பார்க்கில் அமைந்துள்ள மார்க்கெட் எண் 1இல், கோவிலுக்கு அருகே மீன் மார்க்கெட் அமைப்பது தவறு என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.

 தில்லி காவல்துறை மழுப்பல்

இதுதொடர்பாக தில்லி காவல்துறை கூறுகையில்,”மீன் மற்றும் இறைச்சி கடைகள் மூடியது தொடர்பாக எந்தப் புகாரும் பதிவாகவில்லை. ஆனாலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என மழுப்பலாக தெரிவித்துள்ளது. சிஆர்  பார்க் என்பது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது இடம்பெயர்ந்த பெங்காலிகளுக்காக உருவாக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.