states

img

“கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்” பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வேட்பாளர் இழி பேச்சு

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் - பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 28 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை அன்று வெளியிட்டது. அதில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதி ஷியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி,”தில்லியின் ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதி களைப் போன்று கல்காஜி தொகுதியில்  உள்ள அனைத்து சாலைகளையும் பிரி யங்கா காந்தியின் கன்னங்களைப் போல்  ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி யுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாள ரும், மக்களவை எம்.பி.,யுமான பிரி யங்கா காந்திக்கு எதிரான ரமேஷ் பிதுரி யின் இந்த பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மகளிர் அமைப்புகள் நாடு தழுவிய போ ராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இது போன்ற பேச்சின் தந்தையே பிரதமர் மோடிதான் ரமேஷ் பிதுரியின் பேச்சிற்கு காங்கி ரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் தளப் பதிவில்,”பிரியங்கா காந்திக்கு எதி ரான ரமேஷ் பிதுரியின் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் உண்மை முகம். பெண்களுக்கு எதி ரான இதுபோன்ற பேச்சு மற்றும் சிந்தனை யின் தந்தையே பிரதமர் மோடிதான். அவரே பெண்களுக்கு எதிராக “மாங்கல் யம்” மற்றும் “முஜ்ரா” போன்ற வார்த்தை களைப் பயன்படுத்துபவர். இந்த மோச மான பேச்சுக்காக ரமேஷ் பிதுரி மன்னிப்பு  கேட்க வேண்டும்” என அதில் குறிப்பி டப்பட்டுள்ளது.