மோனலிசா - பர்மான் கான் திருமணம் மூலம் மத வன்முறையை கிளப்ப பாஜக திட்டம்
போபால் மத்தியப்பிரதேசத்தின் மகேஸ்வரில் உள்ள நாடோடி சமூகத்தைச் (இந்து பார்த்தி சமூகம்) சேர்ந்தவர் மோனலிசா போன்ஸ்லே. இவர் கடந்த ஆண்டு அலகாபாத் கும்பமேளாவில் மாலைகள், ருத்ராட்சம் விற்று சமூக வலைதளங்களில் வைரலானார். இதனை கண்ட ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவு திரைப்பட இயக்குநரான சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இது தற்போது ஒப்பந்தமாகவே உள்ளது. இதற்கிடையே, மார்ச் 11 அன்று கேரளத்தின் அருமானூரில் உள்ள நயினார் கோவிலில் பர்மான் கான் என்ற முஸ்லிம் இளைஞரை மோனலிசா திருமணம் செய்துகொண்டார். தற் போது திருவனந்தபுரம் அருகே ‘நாகம்மா’ என்ற தனது முதல் மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மோனலிசா உள்ளார். இந்நிலையில், மோனலிசா - கான் திரு மணம் மூலமாக நாட்டில் மத வன்முறையை கிளப்ப ஆர்எஸ்எஸ் - பாஜக திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மத வன்முறையை கிளப்பும் நோக்கத்தில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா,“மோனலிசா போன்ஸ்லேவின் திரு மணம், ஒரு லவ் ஜிஹாத் ஆகும். அந்தப் பெண்ணை சிக்க வைப்பதற்காக மிகத் துல்லி யமாகத் திட்டமிடப்பட்ட ஒரு முயற்சியே இந்த திருமணம். எனது சனாதன சித்தாந்தத்தை முடக்கவே இந்தத் திருமணம் ஒரு திரைக்கதை போல நடத்தப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து மத்தியப் பிரதேச பாஜக முதலமைச்சர் மோகன் யாத வைச் சந்தித்துப் பேசப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்துத்துவாவை புறக்கணித்த மோனலிசா மதமாற்றம் குறித்த தனது ‘தி டைரி ஆப் மணிப்பூர்’ படத்தில் மோனலிசாவை நாயகியாக இயக்குநர் சனோஜ் மிஸ்ரா ஒப்பந்தம் செய்தி ருந்தார். ஆனால் இந்துத்துவா வன்முறை கொள்கை தனக்கு சரிப்பட்டு வராது என ‘தி டைரி ஆப் மணிப்பூர்’ படத்திலிருந்து மோன லிசா ஒதுங்கி, நாகம்மா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படு கிறது. இதனால் அதிருப்தியில் இருந்த சனோஜ் மிஸ்ரா முஸ்லிம் இளைஞரை மோனலிசா திருமணம் செய்ததை சாதகமாகப் பயன்படுத்தி பாஜகவினருடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.
