இந்து மாணவியை முஸ்லிம் மாணவர் காதலித்துக் கொன்றதாக புரளி ஹரியானாவில் பாஜகவின் வன்முறை சதி முறியடிப்பு
குர்கான் பாஜக யுவ மோர்ச்சா உறுப்பினராக இருப்பவர் சவுரியா மிஸ்ரா. இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் காதலர்கள் நெருக்கமாக இருக்கும் நான்கு புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டார். அத்துடன், “ஹரியானா மாநி லம் குர்கானில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த நிகிதா அகர்வால் என்ற 24 வயது கல்லூரி மாணவி, அவரது வகுப்புத் தோழரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆரிப் கானால் காதலித்துக் கொல்லப் பட்டார். மேலும் ஆரிப் அவரை மிரட்டி நண்பர்க ளுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டு இறுதியில் கொலை செய்துள்ளார். பின்னர் நிகிதாவின் உடல் நள்ளிரவில் காட்டில் வீசப் பட்டது” என போலியான தகவலை வெளி யிட்டார். இதனால் குர்கானில் பதற்றமான சூழல் நிலவியது. அம்பலமான புரளி சவுரியா மிஸ்ராவின் இந்தப் பதிவை சுமார் 1,51,000 பேர் பார்த்துள்ளனர். குங்பூ பாண்டே உள்ளிட்ட பல வலதுசாரி கணக்குகளும் சவுரியா மிஸ்ராவின் பதிவை பகிர்ந்துள்ளன. ஆனால் பிரபல சமூக ஊடக உண்மை சரி பார்ப்பு இணையதளமான “ஆல்ட் நியூஸ் (Alt News)” தனது ஆய்வில், “குர்கானில் இது போன்ற எந்தவொரு கொலையும் நடக்க வில்லை. 2020ஆம் ஆண்டு பரீதாபாத்தில் தௌசிப் என்பவரால் நிகிதா தோமர் என்ற மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பழைய சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. ஆனால் பாஜக நிர்வாகி மிஸ்ரா குறிப்பிட்ட ‘நிகிதா அகர்வால்’ சம்பவம் முற்றிலும் கற்பனையா னது” என உறுதிப்படுத்தியது. அதே போல காவல்துறை விசாரணையிலும் நிகிதா அகர்வால் கொலை தொடர்பாக எவ்வித தகவ லும் கிடைக்கவில்லை. இதனையடுத்து டிசம்பர் 11 அன்று குர்கான் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “சவுரியா மிஸ்ரா வால் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. போலிச் செய்தி களைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 16 அன்று குர்கான் காவல் துறை மிஸ்ராவைக் கைது செய்தது. சவுரியா மிஸ்ரா என்ற பெயரில் பதிவிட்ட நபர், உண்மை யில் உத்தரப்பிரதேசத்தின் கவுசாம்பி மாவட் டத்தைச் சேர்ந்த ஹரியோம் மிஸ்ரா என்பது விசாரணையில் தெரியவந்தது. குர்கான் காவல்துறையின் செய்தித் தொடர் பாளர் சந்தீப் சிங் கூறுகையில், “குற்றம் சாட்டப் பட்ட ஹரியோம் மிஸ்ரா திட்டமிட்டு மத ரீதியிலான வெறுப்பைப் பரப்புவதற்காகத் தவ றான தகவல்களைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய பதிவுகள் சமூக அமைதியைக் குலைக்கும் என்பதால் காவல்துறை கடும் நடவ டிக்கை எடுத்துள்ளது” என அவர் கூறினார்.
