கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு பெரும் சிக்கல்?
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியை ஈரான் மூடியுள் ளது. உலகளாவிய எண்ணெய் விநியோ கத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஹார் முஸ் நீரிணை வழியாகவே நடைபெறு கிறது என்ற நிலையில், உலகின் முன் னணி கப்பல் போக்குவரத்து நிறுவன மான மேர்ஸ்க் (Maersk), ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் தனது அனைத்து சரக்குப் போக்குவரத்தையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவ தாக அறிவித்துள்ளது. ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் தரப்பின் பதிலடி ஆகிய வற்றால் ஹார்முஸ் நீரிணைப் பகுதி போர் முனையாக மாறியுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என மேர்ஸ்க் (டென்மார்க் நிறுவனம்) அறிவித்துள் ளது. உலகளவில் சுமார் 15% சரக்குக் கண்டெய்னர்களை கையாளும் மிகப் பெரிய நிறுவனம் மேர்ஸ்க் என்பதால், அந்நிறுவனத்தின் முடிவு சர்வதேச வர்த்த கத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக மேர்ஸ்க் மற்றும் பிற நிறுவனங்களின் இந்தத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மும்பை நாக்பூரில் 17 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தின் ரவுல்கான் கிரா மத்தில் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் (SBL Energy Limited) என்ற பெயரில் வெடிமருந்து தயாரிப்பு நிறு வனம் செயல்பட்டு வருகிறது. சுரங்கத் தொழில் மற்றும் தொழிற்சாலைகளுக் குத் தேவையான வெடிபொருட்களை இந்த ஆலை தயாரித்து வந்தது. இந்நிலையில், ஞாயிறன்று காலை 7 மணியளவில் தொழிற்சாலையில் உள்ள டெட்டனேட்டர் பேக்கிங் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த 2 நிமிடங்களில் தொழிற்சாலையில் இருந்த வெடிமருந்து உள்ள பொருட்கள் வெடித்துச் சிதறின. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் உள்ளூர் மீட்புக் குழு வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இந்த கோரச் சம்பவத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம டைந்த 18 பேர் நாக்பூர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் களில் பலரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இந்தியாவிலிருந்து 650 விமானங்கள் ரத்து ஈரான் மற்றும் மேற்கு ஆசியா வின் சில பகுதிகளில் வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளதால், பிப்ரவரி 28 அன்று இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்களின் 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், மார்ச் 1 அன்று 444 விமா னங்கள் ரத்து செய்யப்படதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் திங்களன்று இந்தியாவிலிருந்து 650க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துபாயில் இந்தியர்களுக்கும் காயம்
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குத லில் இந்தியர்களும் காயமடைந் துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”ஈரான் இதுவரை 541 தற்கொலை படை டிரோன்கள் மற்றும் 165 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. துபாயின் முக்கிய வர்த்தக மையங்கள் மற்றும் அபு தாபியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யங்கள் அருகே பல வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியர்கள் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 58 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த வர்களுக்கு துபாய் மற்றும் அபுதாபி யில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.