மாதவி மீது நடவடிக்கை எடுக்க தடை
பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் உடந்தையாக இருந்த இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதவி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர் வாக இயக்குநர் சுந்தரராமன் ராம மூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது உரிய விசாரணை மேற்கொள்ளு மாறு ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர் சபன் ஸ்ரீவாஸ்தவா மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த சனிக்கிழமை விசாரித்த மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து 30 நாள்களுக்குள் விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், மாதவி புச் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யு மாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாதவி புச், சுந்தரராமன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் திங்களன்று மனுத் தாக்கல் செய்தனர். அவசர வழக்காக இந்த மனுக்கள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.திகே தலைமையிலான அமர்வின் முன் பட்டியலிடப்பட்டு, செவ் வாயன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்,“பிரமா ணப் பத்திரம் தாக்கல் செய்ய புகார் தாரருக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக் கப்படுகிறது. அதுவரை மாதவி உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க இடைக் கால தடைவிதிக்கப்படுகிறது” என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.திகே உத்தரவிட்டார்.