இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்
அமெரிக்க ஜனாதி பதி அறிவித்துவரும் அதிகப்படியான வரிகள் வர்த்தகப் போரை தூண்டியுள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தி யாவில் உற்பத்தியை அதிக ரிக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் விற்ப னையாகும் ஆப்பிள் ஐபோன்க ளுக்கான பாகங்கள் பெரும ளவில் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனாவில் உற்பத்தி சக்தி மற்றும் திறன், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய வற்றின் காரணமாக அந்நிறுவன மும் தனது உற்பத்திக்கு சீனா வையே அதிகம் சார்ந்துள்ளது. இந்நிலையில் டிரம்ப் துவங்கியுள்ள பொருளாதாரப் போரின் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விலை மிக கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தற்காலிகமாக சமா ளிக்க இந்தியாவில் ஐபோன் களின் உற்பத்தியை (அசெம் பளி) அதிகரித்து விநியோகிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்துள்ளார். எனினும் சீனாவை ஒப்பிடுகையில் அது குறைவாகும் (26 சதவீதம்). வரிவிதிப்புகள் அறிவிக்கப்படு வதற்கு முன்பாகவே 2025 இல் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 25 மில்லியன் ஐபோன்க ளை உற்பத்தி செய்ய அந்நிறு வனம் திட்டமிட்டு இருந்தது. அதில் 10 மில்லியன் போன்களை இந்தியா சந்தை க்கும் 15 மில்லியன் போன்களை அமெரிக்கா சந்தைக்கும் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. தற்போது வரிகளின் காரணமாக மொத்தமாக 25 மில்லியன் போன்களை அமெரிக்கச் சந்தைக்கு அந்நிறுவனம் பயன் படுத்தினாலும் அமெரிக்காவின் 50 சதவீதமான நுகர்வோர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும். எனவே உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்தி யாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில் தற்போதைய சூழலை அவர்கள் பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது நேர்மறை யான தாக்கத்தை மட்டுமின்றி ஏற்கெனவே மோசமான சுரண்ட லுக்கு உள்ளாகி வருகின்ற இந்தியத் தொழிலாளர்களின் மீது மேலும் அதிக எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.