புதுதில்லி, டிச. 3 - நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2021 நவம்பரில் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடியாக (23.27 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 2012 அக்டோபரில் 1 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததே அதிகபட்ச வர்த்தகப் பற்றாக்குறை என்ற நிலையில், தற்போது அதையும் தாண்டிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொறியியல், பெட்ரோலியம், ரசாயனங்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் போன்ற முக்கிய துறைகளின் சிறந்த செயல்பாட்டின் காரணமாக, நாட்டின் சரக்கு ஏற்றுமதி கடந்த 2020 நவம்பர் மாதத்தைக் காட்டிலும், 2021 நவம்பரில் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு (26.49 சதவிகிதம்) உயர்ந்துள்ளது.
எனினும் இறக்குமதியும் 3 லட்சத்து 99 லட்சம் கோடி ரூபாயாக (57.18 சதவிகிதம்) உயர்ந்துள்ளதால், இந்த வர்த்தகப் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்திற்கு இடை யிலான வித்தியாசமே வர்த்தகப் பற்றாக்குறை என்ற வகையில், 2021 நவம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 1 லட்சத்து 74 ஆயிரம் கோடியாக உள்ளது. இதுவே, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்ப ரில், வர்த்தகப் பற்றாக்குறை 76 ஆயிரத்து 425 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2012 அக்டோ பரில் 1 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததே அதிபட்ச வர்த்தகப் பற்றாக்குறை என்ற நிலையில், தற்போது அதையும் தாண்டிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் தங்கம் இறக்குமதி மட்டும் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.