states

img

விவசாயிகள் போராட்டங்களின் தூணாக விளங்கிய தோழர் ஜி.சி.பய்யா ரெட்டி காலமானார்

அகில இந்திய விவசாயிகள் சங்கம் புகழஞ்சலி

பெங்களூரு கர்நாடக மாநில விவசாய சங்க  (கேபிஆர்எஸ்) மாநில தலைவரும், அகில இந்திய விவசாய சங்க மத்தியக் குழு உறுப்பினருமான தோழர் ஜி.சி.பய்யா ரெட்டி ஜனவரி 4ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். தோழர் ஜி.சி.பய்யா ரெட்டியின் திடீர் மறைவுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலைவர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் பிஜு கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கர்நாடகாவில் விவசாயிகளின் நலனுக்கான போராட்டத்தில் உறுதியாக இருந்த தோழர் ஜி.சி.பய்யா ரெட்டியின் திடீர் மறைவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த வருத் தத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் செங்கொடி அரைக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும்.  டிசம்பர் 27, 2024 அன்று ஜி.சி.பய்யா ரெட்டி தனது உடலில் ஆக்ஸிஜன் குறைந்ததைத் தொடர்ந்து பெங்களூரு சுகுணா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவசர சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகான தொடர் சிகிச்சையில் குணமடைந்த போதி லும், அவர் கடுமையான நுரையீரல் தொற்றுக்கு ஆளானார். கெடு வாய்ப்பாக சனிக்கிழமை (ஜன வரி 4) அதிகாலை 3:30 மணிக்கு மார டைப்பு ஏற்பட்டு ஜி.சி.பய்யா ரெட்டி காலமானார். அவருக்கு வயது 64 ஆகும். ஜி.சி.பய்யா  ரெட்டியின் மறைவு விவசாய இயக்கத்திற்கும், கர்நாடகாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத் திற்கான பரந்த போராட்டங்க ளுக்கும் ஒரு மகத்தான இழப்பாகும்.

மாணவர் சங்க தலைவர்

1960ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கர்நாடக மாநிலம் சிக்க பல்லாபுரம் மாவட்டம் சிந்தாமணி தாலுகா, கடிகிவரப்பள்ளி கிரா மத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சவுடப்பா மற்றும் பையம்மா ஆகி யோருக்கு மகனாகப் பிறந்தவர் ஜி.சி.பய்யா ரெட்டி. தனது இள மைப் பருவத்திலிருந்தே போராடும் குணத்தை வெளிப்படுத்திய ஜி.சி.பய்யா ரெட்டி, 1980ஆம் ஆண்டு சிந்தாமணி அரசு கல்லூரியில் படிக்கும் போது இந்திய மா ணவர் சங்கத்தில் (எஸ்எப்ஐ) இணைந்து நாளடைவில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தார்.  காவல்துறையின் கொடு மையை எதிர்த்து நடைபெற்ற பிரபலமான நவல்குண்ட்-நர்குண்ட் விவசாயிகள் போராட்டம் உட்பட பெருந்திரளான போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஜி.சி.பய்யா ரெட்டி முக்கிய பங்கு வகித்தார். இந்த போராட்டத்திற்கு பிறகு மாணவர் செயல்பாட்டிலிருந்து விடுபட்டு முற்றிலும் விவசாயி களின் போராட்டங்களில் பங்கு பெற்று, கோலார் மற்றும் சிக்க பல்லாபுரம் மாவட்டங்களில் கவனம் செலுத்தினார். 2000ஆம் ஆண்டு குல்பர்காவில் நடைபெற்ற 12ஆவது விவசாய சங்க மாநில மாநாட்டின் போது, கர்நாடகா விவசாய சங்க மாநில பொதுச் செயலாளராக ஜி.சி.பய்யா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் பிரச்சா ரங்களை நடத்தி, விவசாயிகளின் நேசத்துக்குரிய தலைவரானார்.

போராட்டங்களின் நாயகன்

தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஹூப்ளியில் நடைபெற்ற 16ஆவது மாநில மாநாட்டில் ஜி.சி.பய்யா ரெட்டி கர்நாடகா விவசாய சங்க மாநில தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். தனது கடைசி மூச்சு வரை அவர் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, மார்க்சிய கொள்கை களை உயர்த்திப்பிடித்தார்.  தனது பொது வாழ்வில் ஜி.சி. பய்யா ரெட்டி பல முக்கியமான இயக்கங்களை முன்னெடுத்தார். அவற்றில் நிலம் கையகப்படுத்து தல் எதிர்ப்பு போராட்டங்கள், பகைர் ஹூகம் விவசாயிகளின் நில உரிமைக்கான போராட்டங்கள், பட்டு, பால், கரும்பு, பருப்பு போன்ற பயிர்களுக்கு கட்டுப்படி யான விலைக்கான போராட்டங் கள், விவசாய நீர்ப்பாசனப் பம்பு களுக்கு மீட்டர் பொருத்துவதற்கு எதிரான போராட்டங்கள், காடு கள் உரிமை மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கான போராட்டங் கள், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி குறித்த சட்டமியற்றல் பிரச்சா ரங்கள் ஆகியவை அடங்கும். மோடி அரசால் கொண்டு வரப்பட்ட விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க “தில்லி சலோ” விவசாயிகள் இயக்கத்தின் போது விவசாயி களை ஒன்றிணைப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். அதே போல  “சம்யுக்த ஹோரட்டா கர்நாடகா” மன்றத்தை உருவாக்கி யது, கர்நாடகாவில் பல்வேறு விவசாய அமைப்புகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டுவருவது ஆகியவற்றில் ஜி.சி.பய்யா ரெட்டி முக்கிய பங்கு வகித்தார். அனுபவம் வாய்ந்த மற்றும் தொலைநோக்குப் பார்வையுள்ள இத்தகைய விவசாயத் தலைவரை இழந்தது கர்நாடக மாநிலத்தின்        ஐக்கிய விவசாய இயக்கத்திற்கும் இடதுசாரி போராட்டங்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடை வாகும். இத்தகைய சூழலில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஜி.சி.பய்யா ரெட்டியின் குடும்பத்தி னர், தோழர்கள் மற்றும் கர்நாடகா வின் விவசாயிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றது. அவரது வாழ்க்கை மற்றும்  நினைவுகள் புதிய தலைமுறை புரட்சியாளர்களுக்கு ஊக்கமளிக் கும். செவ்வணக்கம் தோழர் ஜி.சி. பய்யா ரெட்டி” என அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.