states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

வாக்கு திருட்டு அம்பலமான பிறகு, பாஜக பீகாரில் “வாக்கு லஞ்சத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. இந்த மகிளா ரோஜ்கார் திட்டத்தின் மூலம் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட ரூ.10,000 லஞ்சமாகும். அதுவும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஒத்துழைப்புடன். பீகார் மக்களே! ஊழல்மிக்க பாஜகவை வாக்களித்து வெளியேற்றுங்கள்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

இந்திய மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. லடாக்கியர்கள் தங்கள் குரலை எழுப்பிய போது, பாஜக 4 இளைஞர்களைக் கொன்றும், சோனம் வாங்சுக்கை சிறையிலிட்டும் பதிலளித்தது.

மூத்த பத்திரிகையாளர் பியூஷ் ராய்

சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள பீகார் மாநிலத்திற்கு மேலும் 3 புதிய அம்ரீத் ரயில்கள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பீகார் மக்கள் எளிதாக வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக வேலைக்குச் செல்ல உதவும் வகையிலான அறிவிப்பே ஆகும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

ஆசியக்கோப்பையை வென்ற இந்திய அணியிடம் கோப்பையை ஒப்படைக்காமல், ஆசியக் கிரிக்கெட் வாரியத் தலைவரான பாகிஸ்தான் அமைச்சர் மொஷின் நக்வி எடுத்துச் சென்றது ஏற்றுக்கொள்ளமுடியாதது. கோப்பையை தராதது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்கப்படும்.