states

img

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூரம் - அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

குவாலியர் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன் முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகிறது. அதாவது நாட்டின் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஹாட் ஸ்பாட்டாக உள்ளது. இதனை தேசிய மகளிர் ஆணையமே தனது அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தி யுள்ளது.  இந்நிலையில், பாஜக ஆளும் மத்தியப்பிர தேச மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்  அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான குவாலியரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்று வரும் மருத்துவ மாணவி (25)  விடுதி வளாகத்திலேயே சக மருத்துவ மாணவ ரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) அன்று மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். அப்போது மாணவியை சந்திக்க வரும்படி பாலியல் வன்கொடுமை செய்த மாணவர் மிரட்டி யுள்ளார். மிரட்டலுக்கு அஞ்சிய மாணவி, ஆண்கள் விடுதி வளாகத்திற்கு சென்றுள்ளார். அப் போது மாணவர் வலுக்கட்டாயமாக மாண வியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதுகுறித்து காவல்துறையில் மாணவி புகார் அளிக்க, மாணவர் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அடுத்தகட்ட விசார ணையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.