9,000 மி.மீ., மழை மகாராஷ்டிராவில் ஒரு “சிரபுஞ்சி”
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள முல்ஷி தாலு காவில் உள்ளது தம்ஹினி காட். இது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் உள்ளது. பசுமை நிறைந்த தம்ஹினி காட்டில் பல நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள் உள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் குட்டி சுவிட்சர்லாந்து என அழைக்கின் றனர். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி, தம்ஹினி காட் பகுதி இந்த பருவமழை காலத்தில் 9,194 மி.மீ., அளவில் மழையை எதிர் கொண்டுள்ளது என செய்திகள் வெளி யாகியுள்ளன. இதன்மூலம் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி மற்றும் மவுசின்ராம் கிராமங்க ளுடன் போட்டியிடும் அளவிற்கு நாட்டின் மிக முக்கிய ஈரப்பதம் உள்ள இடமாக தம்ஹினி காட் மாறியுள்ளது என புயல் ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் வினீத் குமார் கூறியுள்ளார்.